என்ஜிகே! பரபரப்பில்.... படபடப்பில்... நடிகர் சூர்யா
சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில்,இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே படம் இந்த மாதம் 31ம் தேதி வெளியாக உள்ளது.
கடைசியாக தனது நடிப்பில் வெளிவந்த தானா சேர்ந்த கூட்டம் சூர்யாவுக்கு கைக்கொடுக்காமல் போனது. இதுவரை அவர் அந்த வருத்தத்தில் இருந்து மீளவே இல்லை.
ஒரு ஹிட் குடுத்துட்டு சூர்யா செம ஹேப்பி அண்ணாச்சி என்றாகி விடுவார். எப்போதுமே சூர்யா தோல்வியை கண்டு துவண்டு போகிறவர்.

ஜோதிகா
சூர்யாவுக்கு எல்லா விதத்திலும் பெரும் பக்க பலமாக இருப்பவர் நடிகையும் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா. நடிக்கும்போதும் சரி, டான்ஸ் ஆடும்போதும் சரி சூர்யாவுக்கு ஒரு எனர்ஜி, வெறி தெரிந்ததுக்கு காரணம் திருமணத்துக்கு முன்னான ஜோதிகாவின் அறிவுரைதான்.

செய்தாலும்
என்னதான் தோல்வியைக் கண்டு துவண்டு இருக்கும் சூர்யாவுக்கு ஜோதிகா ஆறுதல் சொன்னாலும் மனுஷன் மூட் அவுட்டில்தான் இருப்பாராம்.இது பழகிப் போய்விட்டது ஜோதிகாவுக்கு. சொல்றவரைக்கும் சொல்லிட்டு கண்டுக்காமல் விட்டுட்டா தானே சரியாகி விடுவாராம் சூர்யா.

என்ஜிகே வெற்றிக்காக
இப்போது என்ஜிகே வெற்றிக்காக மிகவும் ஆவலுடன் காத்து இருக்கார் சூர்யா.அடுத்து காப்பான்.. இதன் வெற்றிக்கும் காத்து இருக்கார். இப்போது கைவசம் உள்ள படங்கள் வெற்றி பெற்று தான் சந்தோசம் அடைந்த நிலையில்தான் அடுத்து கதை கேட்பது என்கிற முடிவில் இருக்காராம்.

பறவைகளுக்கு தண்ணீர்
இப்போது வெயில் காலம் என்பதால் பறவைகள் தண்ணீருக்காக தவிக்கின்றன.வீட்டின் வெளியே அல்லது மொட்டை மாடியில் பறவைகள் குடிக்க தண்ணீர் வையுங்கள் என்று கூறி இருக்கிறார் சூர்யா.அதே சமயம் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் என்றும் கூறியுள்ளார்.

மழை சீன்
அது சரி சூர்யா...படத்தில் மழையில் டூயட், சண்டை காட்சிகள் வைக்கும்போது ஏகப்பட்ட லாரி தண்ணீர் வீணாகுதே... இதற்கு ஏதேனும் ஐடியா வைத்துள்ளீர்களா?


Click it and Unblock the Notifications











