Suriya's NGK Teaser Leak :இது என்னய்யா சூர்யாவுக்கு வந்த சோதனை?
Recommended Video

சென்னை: டீஸர் லீக் என்பது தமிழ் திரையுலகில் தொடர் கதையாகி வருகிறது.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள என்.ஜி.கே. படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள். இந்நிலையில் படத்தின் டீஸர் இன்று காலை 10. 30 மணிக்கு வெளியிடப்பட்டது.
முன்னதாக நேற்றே யாரோ டீஸரை சமூக வலைதளத்தில் கசியவிட்டனர்.

என்.ஜி.கே.
என்.ஜி.கே. டீஸர் ட்விட்டரில் கசிந்ததை பார்த்து படக்குழு மட்டும் அல்ல சூர்யாவின் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். புதுப்பட டீஸர்கள் சமூக வலைதளங்களில் லீக்காவது தொடர்கதையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

காலா
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் ட்ரெய்லரும் லீக்கானது. முன்னதாக அவரின் காலா மற்றும் 2.0 படங்களின் டீஸர்கள் லீக்கானது. சூப்பர் ஸ்டார் படங்களுக்கே இந்த நிலையா என்று ரசிகர்கள் வியந்தனர். இந்நிலையில் சூர்யாவுக்கும் அதே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

தமிழ் ராக்கர்ஸ்
புதுப்படங்கள் ரிலீஸானால் அதை சில மணிநேரங்களில் கசியவிடுகிறது தமிழ் ராக்கர்ஸ். சில நேரத்தில் படம் ரிலீஸாவதற்கு முன்பே அதை கசியவிட்டு விடுகிறது. அந்த தலைவலி போதவில்லை என்று தற்போது டீஸர், ட்ரெய்லர்களை யாரோ கசியவிடுகிறார்கள்.

லீக்
டீஸர், ட்ரெய்லர்களை படக்குழுவுடன் தொடர்புள்ளவர்கள் தான் கசியவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த டீஸர், ட்ரெய்லர்கள் லீக்காவதை தடுக்க தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் ஏதாவது நடவடிக்கை அதையும் உடனே எடுத்தால் பேருதவியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications











