NGK- என்.ஜி.கே. மாஸா, புஸ்ஸா?: ட்விட்டர் விமர்சனம்
Recommended Video
சென்னை: சூர்யா நடித்துள்ள என்.ஜி.கே. படத்தை பார்த்தவர்கள் அது குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்த என்.ஜி.கே. படம் இன்று ரிலீஸாகியுள்ளது. இந்த படத்திற்காகத் தான் சூர்யா ரசிகர்கள் தவமாய் தவமிருந்தனர்.
அப்டேட் கேட்டு தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரிடம் தினமும் கெஞ்சிக் கதறி டயர்டாகிவிட்டனர். இந்நிலையில் ஒரு வழியாக படம் இன்று ரிலீஸாகியுள்ளது. படத்தை பார்த்தவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.
என்.ஜி.கே.
என்.ஜி.கே. படம் சூர்யா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. சூர்யாவின் நடிப்பை பார்த்துவிட்டு அவர்களால் பாராட்டுவதை நிறுத்த முடியவில்லை. செல்வராகவன் மாஸ் காட்சிகளை வைத்துள்ளார் என்று புகழ்கிறார்கள். என்.ஜி.கே. நிச்சயம் பெரிய ஹிட்டாகும் என்பதில் சூர்யா ரசிகர்களுக்கு சந்தேகமே இல்லை. படத்தை சூர்யா தான் தன் அபார நடிப்பால் தாங்குகிறார் என்று விமர்சனம் எழுந்துள்ளது.
செல்வராகவன்
என்.ஜி.கே. படத்தில் சூர்யா அண்ணாவின் கடின உழைப்பு மிரள வைக்கிறது. செல்வராகவன், சூர்யா அண்ணா கூட்டணி அருமை. பிஜிஎம், பேக்கிரவுண்ட் ஸ்கோர் மாஸாக கொடுத்துள்ளார் யுவன் ஷங்கர் ராஜா. பிளாக் பஸ்டராகும் என்று நம்புகிறேன். சூர்யா அண்ணன் ரசிகர்கள் பாசம் அருமை என்கிறார் ரோகேஷ்.
கூட்டம்
இப்போ பாரு படம் இன்னும் நல்லா எடுத்து இருக்கலாம், படம் சுமார்தான், நெனச்ச மாதிரி இல்லனு ஒரு கூட்டம் வரும்!
பத்துவருசம் கழிச்சு இந்த படத்தை கொண்டாடுவாங்க😎
போங்கடாடேய்! செல்வராகவன் சாருக்கு வாழ்த்துக்கள் என்று வாழ்த்தியுள்ளார் அரவிந்த்.
அரசியல் படம்
#NGK குடும்பத்தோட பார்க்கும்படியான ஒரு அரசியல் படம் தந்ததுக்கே பாராட்டனும் @Suriya_offl 👍
@selvaraghavan & @thisisysr காம்போல அடுத்த வெற்றி👌
@DreamWarriorpic கங்கிராட்ஸ் என்று வாழ்த்தியுள்ளார் அருண்.

ஒரு கூட்டம்
என்.ஜி.கே. படம் கொடூர மொக்கை. சூர்யாவுக்கு மேலும் ஒரு பிளாப் படம். போய் கதறுங்கப்பா ரசிகாஸ் என்று குறிப்பிட்ட ஒரு நடிகரின் ரசிகர்கள் கழுவிக் கழுவி ஊத்திக் கொண்டிருக்கிறார்கள். படத்தில் ஒரு சில மைனஸ் இருந்தாலும் கொண்டாடும்படி உள்ளது என்கிறார்கள் என்.ஜி.கே.வை பார்த்தவர்கள்.


Click it and Unblock the Notifications











