பெண்களுக்கே இவங்க மேல கிரஷ் வருமாம்.. லைக் கேட்கிறார், ஊஞ்சலில் ஆடும் பிரபல சீரியல் நடிகை!
சென்னை: பிரபல நடிகை ஊஞ்சலில் ஜாலியாக ஆடும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
இந்தி சினிமாவின் கவர்ச்சி குயின்களில் இவரும் ஒருவர் என்கிறார்கள் நடிகை நியா சர்மாவை.
எப்போதும் அதிரிபுதிரி கிளாமர் புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர்.

பெஹ்னா ஹை
இந்தியில் சில படங்களில் நடித்துள்ள இவர் பல சிரீயல்களில் நடித்துள்ளார். விஜய் டிவி-யில் ஒளிபரப்பான தெய்வம் தந்த என் தங்கை தொடரில் நாயகியாக நடித்தவர் இவர்தான். இது இந்தியில், ஏக் ஹஸாரோன் மேய்ன் மேரி பெஹ்னா ஹை என்ற பெயரில் வெளியாகி இருந்தது. இதன் தமிழ் மொழி மாற்றம்தான் அந்த தொடர்.

ஜமாய் ராஜா
அடுத்து, ஜீடிவியில் ஒளிபரப்பான ஜமாய் ராஜா என்ற தொடரிலும் நாயகியாக நடித்திருந்தார். பிரபலமான 'நாகினி' தொடரிலும் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் இவர். நாகினி 5 வது சீசனிலும் நடித்து வருகிறார். ஆசியாவின் கவர்ச்சிகரமான 50 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்தவர், இவர்.

வெப் சீரிஸ்களில்
இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கெடுத்துள்ள நியா சர்மா, வெப்சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். சில நாட்களுக்கு முன் அவர் வெளியிட்ட கிளாமர் போட்டோஸ் கண்டபடி வைரலானது.

லைக் மட்டும்
இப்போது ஊஞ்சலில் ஜாலியாக ஆடிக்கொண்டிருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ரிசார்ட் ஒன்றில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் புகைப்படங்களில் அவர் கிளாமராக இருக்கிறார். இதற்கு கேப்ஷனாக, எப்படி ஊஞ்சலாடுவீர்கள் என்பது முக்கியமல்ல, ஒரு லைக் மட்டும் போடுங்க என்று கூறியுள்ளார்.

பாராட்டும் நெட்டிசன்ஸ்
இதையடுத்து ஆயிரக்கணக்கான லைக்ஸ் அம்சமாக வந்து விழுந்திருக்கிறது, போட்டோ வெளியிட்ட ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே. இந்த போட்டோஸ் அனைத்தும் செம, அட்டகாசம், கிளாஸ் என பாராட்டித் தள்ளியிருக்கின்றனர், பல நெட்டிசன்ஸ்.

வேற மாதிரி ஸ்டைல்
இந்த போட்டோஸ் பார்த்தா, பெண்களுக்கே உங்க மேல கிரஷ் வரும் சிலர் கூறியுள்ளனர். சிலர் உங்க ஸ்டைலே வேற மாதிரி இருக்கு, வாழ்த்துகள் என தெரிவித்துள்ளனர். சில கிண்டல் நெட்டிசன்ஸ், காதல் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த புகைப்படங்கள் வைரலாகி


Click it and Unblock the Notifications