இப்படியா டிரெஸ் போடுவீங்க, வெட்கமா இல்லை..? பிகினி நடிகையை கண்டபடி விளாசிய ரசிகர்கள்!
சென்னை: பிரபல நடிகை பிகினியில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை ரசிகர்கள் விளாசியுள்ளனர்.
விஜய் டிவி-யில் ஒளிபரப்பான தெய்வம் தந்த என் தங்கை தொடரில் நாயகியாக நடித்தவர் நியா சர்மா.
இது இந்தியில், ஏக் ஹஸாரோன் மேய்ன் மேரி பெஹ்னா ஹை என்ற பெயரில் வெளியாகி இருந்தது.

வரவேற்பை பெற்றவர்
இதன் தமிழ் மொழி மாற்றம்தான் அந்த தொடர். அடுத்து, ஜீடிவியில் ஒளிபரப்பான ஜமாய் ராஜா என்ற தொடரிலும் நாயகியாக நடித்திருந்தார். பிரபலமான 'நாகினி' தொடரிலும் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர், இவர். இப்போது ஒளிபரப்பாகி வரும் நாகினி 5 வது சீசனிலும் நடித்து வருகிறார்.

அடிக்கடி அட்டகாசம்
பாலிவுட் கவர்ச்சி குயின்களில் இவரும் ஒருவர் என்கிறார்கள் நியா சர்மாவை. கிளாமர் இல்லாமல் அவரை பாக்க முடியாதாம். அடிக்கடி அட்டகாசமான ஸ்டில்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு, ரசிகர்களின் பல்ஸை கண்டபடி எகிற வைக்கும் வித்தை தெரிந்தவர். இதற்காகவே இவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருக்கிறது.

ஆசியாவின் கவர்ச்சி
இந்தியில் சில படங்களில் நடித்துள்ள இவர் பல சிரீயல்களில் நடித்துள்ளார். பிரீட்டீஸ் நாளிதழ் ஒன்று ஆசியாவின் கவர்ச்சிகரமான சிறந்த 50 பெண்கள் பட்டியலில் இவரையும் சேர்த்திருந்தது, சில வருடங்களுக்கு முன். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ள நியா சர்மா, வெப்சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.

பிகினி போட்டோ
சமூக வலைதளங்களில், ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி தனது புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இப்போது அவர் வெளியிட்டுள்ள பிகினி புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

குறைப்பது எப்படி?
இந்த புகைப்படத்துக்கு கேப்ஷனாக, குண்டான உடலை இரண்டே நாட்களில் குறைப்பது எப்படி? என்று கேட்டுவிட்டு, உங்களால் முடியாது என்று அவரே பதிலையும் குறிப்பிட்டுள்ளார். இதற்கு பல நெட்டிசன்ஸ், எங்களுக்கு தெரியும் என்றும் சிலர் நிஜமாகவே தெரியாது என்றும் கூறியுள்ளனர்.
Recommended Video

போஸ்ட் பண்ணாதீங்க
பல நெட்டிசன்ஸ் அவர் அழகை வர்ணித்திருந்தாலும் சிலர் இப்படி உடலை காண்பிக்கிறீங்களே வெட்கமா இல்லையா? என்று விளாசியுள்ளனர். சிலர், இந்த மாதிரி போட்டோவை இனி போஸ்ட் பண்ணாதீங்க என்று கோரிக்கையாக வைத்துள்ளனர். இதற்கிடையே, பலர் அவர் நடிப்பை பாராட்டியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











