அரை நிர்வாணமாக அரங்கேறிய பேபி பம்ப் போட்டோஷூட்.. 9வது குழந்தைக்கு காத்திருக்கும் காமெடி நடிகர்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: சமீப காலமாக பேபி பம்ப் போட்டோஷூட்டை எந்தளவுக்கு வித்தியாசமாக நடத்தலாம் என பெரிய போட்டியே நிலவி வருகிறது.

நிறைமாத வயிற்றை கவர்ச்சி உடையில் ஓப்பனாக காட்டியபடி பிரணிதா, நமீதா, சோனம் கபூர் உள்ளிட்ட பல பிரபலங்கள் போட்டோஷூட் நடத்தினர்

இந்நிலையில், அமெரிக்காவின் காமெடி நடிகர் நிக் கேனானின் இரண்டாவது மனைவி பிரிட்டானி பெல் நடத்திய அரை நிர்வாண பேபி பம்ப் போட்டோஷூட் வீடியோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

கர்ப்பகால போட்டோஷூட்

கர்ப்பகால போட்டோஷூட்

ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் ஒரு பக்கம் எல்லையை மீறி சென்று கொண்டிருக்க அதை விட மோசமாக கர்ப்பகால போட்டோஷூட் இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது. சமீபத்தில் நடிகை சமீரா ரெட்டி தண்ணீருக்குள் நடத்திய கர்ப்பகால போட்டோஷூட், நடிகை நமிதா நடத்திய பேபி பம்ப் போட்டோஷூட், சோனம் கபூர் கணவருடன் நடத்திய கவர்ச்சி கர்ப்பகால போட்டோஷூட் என நடிகைகள் மற்றும் சினிமா பிரபலங்கள் எல்லை மீறி வருகின்றனர்.

அதுவொரு சந்தோஷம்

அதுவொரு சந்தோஷம்

பிரபலங்களுக்கு தங்களது நிறைமாத வயிற்றை போட்டோக்களாக எடுத்துக் கொண்டு நினைவுகளை தங்களது குழந்தைகள் பிறந்து வளர்ந்தவுடன் சொல்வதில் மிகப்பெரிய சந்தோஷம் இருக்கத்தான் செய்யும். ஆனால், கர்ப்பகால போட்டோஷூட்டில் போட்டா போட்டி போட்டுக் கொண்டு நிர்வாண போட்டோஷூட்கள் அரங்கேறுவது இன்ஸ்டாகிராமில் அதிக லைக்குகள் அல்லவா? என்கிற கேள்வியையும் எழுப்புகிறது.

9வது குழந்தை

9வது குழந்தை

அமெரிக்காவின் பிரபல டிவி தொகுப்பாளர், ராப் இசை பாடகர் காமெடி நடிகரான நிக் கேனான் கடந்த 2008ம் ஆண்டு மரியா கேரி என்பவரை திருமணம் செய்து கொண்டு அவருடன் 6 குழந்தைகளை பெற்றுக் கொண்டு 2016ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். அதன் பின்னர் மாடல் அழகி பிர்ட்டானி பெல் உடன் குடும்பம் நடத்தி வரும் நிக் அவருடன் சேர்ந்து 2 குழந்தைகளை பெற்றெடுத்த நிலையில், இது அவர்களுக்கு 3வது குழந்தை. நிக்கிற்கு 9வது குழந்தை என்கின்றனர்.

அரைநிர்வாண போட்டோஷூட்

அரைநிர்வாண போட்டோஷூட்

இந்நிலையில், அரை நிர்வாணமாக ஆடையே அணியாமல் தனது முன்னழகை வெறும் கைகளால் மூடியபடி நடத்திய போட்டோஷூட் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. நிக் கேனான் தனது இன்ஸ்டாகிராமில் அந்த வீடியோவை பதிவிட்டு லைக்குகளை குவித்து வருகிறார். பிறக்கப் போகும் குழந்தை ஆண் குழந்தை என்கிற சிக்னலையும் வெளிப்படுத்தி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X