விலை உயர்ந்த பிறந்த நாள் பரிசு… கணவரின் அன்பால் திக்குமுக்காடி போன பிரியங்கா சோப்ரா!
அமெரிக்கா : நிக் ஜோனல் காதல் மனைவி பிரியங்கா சோப்ராவுக்கு மிகவும் விலை உயர்ந்த ஒயின் பாட்டிலை பிறந்த நாள் பரிசாக அளித்துள்ளார்.
கணவரின் இந்த செயலால் நெகிழ்ந்து போன பிரியங்கா, அந்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் பரிசு கொடுப்பது இயல்புதான் என்றாலும்,வித்தியாசமான இந்த பரிசை அனைவரும் வியந்து பார்க்கின்றனர்.

மிஸ்வேர்ல்டு
2000 ம் ஆண்டு மிஸ்வேர்ல்டு அழகியும், பாலிவுட் நடிகையுமானவர் பிரியங்கா சோப்ரா. தமிழ், தெலுங்கு, இந்தி,மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ரவுண்டு கட்டி நடித்துள்ளார். என்னதான் வயசு ஆனாலும் இன்னும் மவுசு குறையாமல் நடித்து வருகிறார்.

காதல் திருமணம்
முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா தன்னை விட 10 வயது குறைவான நிக் ஜோனஸ் என்பவரை கடந்த 2018ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் இந்த நட்சத்திர தம்பதிகள் அப்டேட்டுகளை இன்ஸ்டாவில் வெளியிட்டு வருகின்றனர்.

பிகினியில்
கடந்த 18ந் தேதி தனது 39வது பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா , பிகினியில் கும்மாளம் அடித்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் உறக்கத்தை கொடுத்தார். பிறந்தநாளைக்குமா எப்படி என்றும் ரசிகர்கள் கேட்டு வந்தனர்.

பிறந்த நாள் பரிசு
நிக் ஜோனஸ்,பிரியங்காவுக்கு ஒரு விண்டேஜ் ஒயின் பாட்டிலை பிறந்த நாள் பரிசாக அளித்துள்ளார். விண்டேஜ் 1982, பிரான்சில் போர்டியாக்சின் வடமேற்கு பகுதியான பாய்லாக் கிராமத்தில் தயாரிக்கப்பட்டது. அந்த அரிய ஒயின் பாட்டிலின் விலை 1,31,375 ரூபாயாம், இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த பிரியங்கா தனது கணவருக்கு நன்றி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











