பிறந்தநாளும் அதுவுமா நடிகையை கடலில் தள்ளிவிட்ட கணவர்

By Siva

மும்பை: பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது நிக் ஜோனஸ் தனது மனைவி ப்ரியங்கா சோப்ராவை கடலில் தள்ளிவிட்டுள்ளார்.

பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா கடந்த 18ம் தேதி தனது 37வது பிறந்தநாளை கொண்டாடினார். பிறந்தநாள் கொண்டாட்டத்தையொட்டி அவர் தனது கணவர் நிக் ஜோனஸ், அம்மா மது சோப்ரா, தங்கை பரினீத்தி உள்ளிட்டோருடன் மயாமி கடலில் படகில் சென்றார்.

Nick Jonas pushes wife into water on her Bday

அப்பொழுது நிக் ஜோனஸ் ப்ரியங்காவை கடலில் தள்ளிவிட்டுள்ளார். அவர் தன் மனைவியை கடலில் தள்ளிவிட்டபோது எடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அவர் வேண்டும் என்றே செய்யவில்லை சும்மா விளையாட்டுக்கு செய்தாராம்.

ஏற்கனவே ப்ரியங்கா, நிக் ஜோனஸ் இடையே பிரச்சனை என்று பேசியவர்கள் இந்த புகைப்படங்களை பார்த்து ஒரு முடிவுக்கே வந்துவிட்டார்கள். அந்த படகில் சென்றபோது ப்ரியங்கா சிகரெட் பிடித்தார். தனக்கு ஆஸ்துமா உள்ளதாக கூறிய ப்ரியங்கா புகைப்பிடித்ததை பார்த்த ரசிகர்கள் அவர் இரட்டை வேடம் போடுவதாக விளாசினார்கள்.

படகில் நிக் ஜோனஸ் உள்ளாடையுடன் நின்று குளிக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது. தொடர்ந்து மனைவியுடன் சேர்ந்து பார்ட்டிகளுக்கு செல்லும் நிக் ஜோனஸுக்கு லைட்டாக தொப்பை போட்டுள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் யாரும் அவரை கிண்டல் செய்யவில்லை மாறாக பாராட்டியுள்ளனர்.

அவர்கள் நிக் ஜோனஸை பாராட்டி போட்ட சில கமெண்ட்டுகளை பார்த்தால் குமட்டிக் கொண்டு வருகிறது. முன்னதாக அக்வாமேன் ஹாலிவுட் பட நடிகர் ஜேசன் மோமோவின் புகைப்படம் வெளியானபோது அவரின் சின்ன தொப்பையை பார்த்து நெட்டிசன்கள் கண்டமேனிக்கு கலாய்த்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நிக் ஜோனஸ் தனது மனைவியின் பிறந்தநாளுக்கு பிரமாண்ட கேக் வாங்கிக் கொடுத்து ஜமாய்த்துவிட்டார். மேலும் மனைவியுடன் சேர்ந்து நெருக்கமாக எடுக்கும் புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார் நிக் ஜோனஸ்.

நிக் ஜோனஸின் இன்ஸ்டாகிராம் கணக்கு பக்கம் சென்றால் அவருக்கு மனைவி மீது இம்புட்டு பாசமா என்று நினைக்கத் தோன்றுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X