படியில் தவறி விழப் பார்த்த ப்ரியங்கா, தாங்கிப் பிடித்த நிக்: வீடியோ இதோ
லாஸ் ஏஞ்சல்ஸ்:படியில் தவறி விழப் பார்த்த நடிகை ப்ரியங்கா சோப்ராவை அவரின் கணவர் நிக் ஜோனஸ் தாங்கிப் பிடித்து காப்பாற்றியுள்ளார்.
பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா திருமணமான கையோடு கணவர் நிக் ஜோனஸை பிரியப் போவதாக செய்திகள் வெளியாகின. அந்த செய்திகளில் உண்மை இல்லை என்று ப்ரியங்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ப்ரியங்கா, நிக் பற்றிய வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
ப்ரியங்கா
மாடியில் இருந்து இறங்கி வந்தபோது ப்ரியங்கா சோப்ரா தவறி விழப் பார்த்தபோது நிக் ஜோனஸ் அவரை தாங்கிப் பிடித்து காப்பாற்றிய வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
புகைப்படங்கள்
விவாகரத்து செய்தி வெளியானதில் இருந்து அது தவறு என்பதை நிரூபிக்கும் வகையில் தான் நிக் ஜோனஸ் குடும்பத்தாருடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார் ப்ரியங்கா.

பரிசுகள்
நிக் ஜோனஸ் அடிக்கடி ஏதாவது பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுத்து ப்ரியங்காவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கிறாராம். இப்படி ஒரு கணவர் கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று ப்ரியங்கா தனது தோழிகளிடம் பெருமையாக கூறி வருகிறாராம்.
பிரச்சனை
ப்ரியங்கா பணத்தை தண்ணீராக செலவு செய்வது நிக் ஜோனஸுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்பட்டதில் உண்மை இல்லையாம். நிக்கே தனது மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க கணக்கு பார்க்காமல் செலவு செய்கிறாராம்.


Click it and Unblock the Notifications











