அந்த வாட்ச்ச வச்சே காலத்தை ஓட்டிடலாம் போல.. பிரியங்கா கணவரின் கைக்கடிகாரம்.. எத்தனை கோடி தெரியுமா?

மும்பை: அமெரிக்க பாடகரும், நடிகருமான நிக் ஜோனஸ் கையில் இருக்கும் காஸ்ட்லி வாட்ச் எத்தனை கோடி என்ற விவரம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

Recommended Video

Golden globes 2020 | Priyanka Chopra Nick Jones | Lip Lock in Red Carpet

இந்திய நடிகை பிரியங்கா சோப்ராவை திருமணம் செய்து கொண்ட நிக் ஜோனஸ் கையில் இருக்கும் கடிகாரம் தான் சமூக வலைதளத்தில் ஹாட் டாபிக்கே.

இந்த ஆண்டு 2020ல் எத்தனையோ சோதனைகள் நடந்திருந்தாலும், இது போன்ற சில சுவாரஸ்யங்களுக்கும் பஞ்சமில்லை.

கோல்டன் குளோபில்

கோல்டன் குளோபில்

இந்த ஆண்டு ஜனவரி மாதம் பீவர்லி ஹில்டனில் நடைபெற்ற கோல்டன் குளோப் விருது விழாவில், மனைவி பிரியங்கா சோப்ராவுடன் கோட் சூட் மாட்டிக் கொண்டு செம ராயலாக கலந்து கொண்டார் நடிகர் நிக் ஜோனஸ். அங்கே வந்திருந்த பிரபலங்கள் உள்பட பலரது பார்வையும் அவரது கைக்கடிகாரத்தின் மீதே இருந்தது குறிப்பிடத்தக்கது.

வெள்ளை தங்கமும், வைரங்களும்

வெள்ளை தங்கமும், வைரங்களும்

தற்போது அந்த காஸ்ட்லி வாட்சின் விலை வெளியாகி வைரலாகி வருகிறது. வெள்ளை தங்கத்தினால் ஆன அந்த கடிகாரத்தில் ஏகப்பட்ட வைரங்கள் பதிக்கப்பட்டு இருக்கின்றன சைஸில் மிகப்பெரியதாக பிரம்மாண்டமாக இருந்த அந்த வாட்ச், நிக் ஜோனஸ் கையையே பலரையும் பார்க்கும் படி தூண்டியது.

எத்தனை கோடி தெரியுமா?

எத்தனை கோடி தெரியுமா?

192 பாகட் கட் வைரங்கள் பதிக்கப்பட்ட அந்த விலையுயர்ந்த கைக் கடிகாரத்தின் விலை ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்திய ரூபாயில் அதன் மதிப்பு சுமார் 7.5 கோடி என கணித்துள்ளனர். உலகிலேயே மிக உயர்ந்த கைக்கடிகாரங்களில் இதுவும் ஒன்று என ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஜுமான்ஜி படத்தில்

ஜுமான்ஜி படத்தில்

இந்த ஆண்டு வெளியான டுவைன் (ராக்) ஜான்சனின் ஜுமான்ஜி: தி நெக்ஸ்ட் லெவல் படத்தில் முக்கியமான வேடத்தில் ராக்குடன் இணைந்து நடித்திருந்தார் நிக் ஜோனஸ். மனைவி பிரியங்கா சோப்ராவை போலவே ஃபேஷன் துறையிலும் தனியாக கலக்கி வரும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X