சிம்புவின் 'ஈஸ்வரன்' படத்தில்.. அவர் அக்கா, இவர் தங்கச்சி.. இயக்குனர் சுசீந்திரன் தகவல்!
சென்னை: சிம்புவின் ஈஸ்வரன் படத்தில் அந்த நடிகை அக்காவாகவும் இந்த ஹீரோயின் தங்கையாகவும் நடிக்கின்றனர்.
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம், ஈஸ்வரன். இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது.
கிராமத்துப் பின்னணியில் இந்தப் படம் உருவாகி உள்ளது. 33 நாட்களில் ஷூட்டிங்கை முடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நிதி அகர்வால்
இதில் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நிதி அகர்வால் ஹீரோயின். மற்றொரு ஹீரோயினாக நந்திதா ஸ்வேதா நடிக்கிறார். பால சரவணன், முனீஷ்காந்த் உள்பட பலர் நடிக்கின்றனர். திரு ஒளிப்பதிவு செய்கிறார். தமன் இசை அமைக்கிறார். மாதவ் மீடியா நிறுவனம் தயாரிக்கிறது.

சர்பிரைஸ் சிம்பு
இந்தப் படத்துக்காக, சிம்பு உடல் எடையைக் குறைத்து ஸ்லிம் ஆகி இருக்கிறார். ஷூட்டிங் முடிவடைந்ததும், படத்தில் பணியாற்றிய 400 பேருக்கும் சர்பிரைஸ் கொடுத்திருக்கிறார், சிம்பு. அதாவது தீபாவளி பரிசாக, ஒரு கிராம் தங்கம், வேட்டி சேலை, இனிப்புகள் என தீபாவளி பரிசுகளை வழங்கியுள்ளார்.

அதையும் முடித்தார்
தன்னுடன் நடித்த துணை நடிகர்கள் 200 பேருக்கு வேட்டி சேலை, இனிப்புகள் வழங்கி இருக்கிறார். 'ஈஸ்வரன்' ஷூட்டிங் முடிவடைந்ததைத் தொடர்ந்து, படத்தின் டப்பிங் பணியை தொடர்ந்த சிம்பு, அதையும் முடித்துவிட்டதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்தப் படத்தின் கதைப் பற்றி தெரிவித்துள்ளார் இயக்குனர் சுசீந்திரன்.

காமெடி, காதல்
'கோயில்கள் இருக்கும் இடத்தில் விஐபிக்களோ, அவர்கள் குடும்பத்தினரோ வரும்போது, அவர்களை பத்திரமாகக் கூட்டிக்கொண்டு செல்ல சிலர் இருப்பார்கள். அப்படியான கேரக்டரில் சிம்பு நடிக்கிறார். லாக்டவுனில் நடக்கும் கதைதான். குடும்ப கதையில் காமெடி, காதல் சேர்த்து உருவாக்கி இருக்கிறேன்.

அக்கா தங்கச்சி
படத்தில் நிதி அகர்வாலும் நந்திதா ஸ்வேதாவும் அக்கா தங்கையாக நடித்திருக்கிறார்கள். அவர்கள் கேரக்டரும் ரசிக்கும்படியாக இருக்கும். சிம்பு ஒரே டேக்கில் ஓகே பண்ணிவிடுவார். நான்கு மணி நேரம் ஷூட்டிங்கில் இருந்தால் இரண்டு காட்சிகளை எளிதாக எடுத்துவிடலாம்' என்று கூறியுள்ளார், சுசீந்திரன்.


Click it and Unblock the Notifications











