ஹீரோயின் திடீர் மாற்றம்.. உதயநிதி ஸ்டாலின் ஜோடியானார் சிம்பு ஹீரோயின்.. அடுத்த மாதம் ஷூட்டிங்!

By

சென்னை: உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக சிம்பு பட ஹீரோயின் ஒப்பந்தமாகி இருப்பதாகக் கூறப்படுகிறது.

ரோமியோ ஜூலியட், போகன் படங்களை இயக்கியவர் லக்‌ஷ்மண். இவர் இப்போது இயக்கும் 'பூமி' படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார் நிதி அகர்வால்.

இதில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்துள்ளார். இது அவருக்கு 25-வது படம். டி.இமான் இசை அமைக்கிறார்.

மிஸ்டர் மஞ்சு

மிஸ்டர் மஞ்சு

நிதி அகர்வால், இந்தியில் டைகர் ஷெராப் ஜோடியாக 'முன்னா மைக்கேல்' என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர். பின்னர் தெலுங்குக்கு வந்த இவர், சவ்யா சாச்சி, மிஸ்டர் மஞ்சு ஆகிய படங்களில் நடித்தார். இந்தியில் அதிக வாய்ப்பில்லை. அடுத்து, ஐஸ்மார்ட் சங்கர் என்ற தெலுங்கு படத்தில் நடித்தார்.

சிம்பு ஜோடியாக

சிம்பு ஜோடியாக

ராம், ரபா நடேஷ், நிதி அகர்வால் உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. புரி ஜெகநாத் இயக்கியிருந்தார். அவரும் நடிகை சார்மியும் இணைந்து தயாரித்திருந்தனர். இதையடுத்து மேலும் சில தெலுங்கு படங்களில் ஒப்பந்தமாகி உள்ள நிதி அகர்வால், தமிழில் சிம்பு ஜோடியாக நடித்து வருகிறார்.

கெஸ்ட் ரோல்

கெஸ்ட் ரோல்

சுசீந்திரன் இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங், இப்போது திண்டுக்கல்லில் நடந்து வருகிறது. இதில் நந்திதா ஸ்வேதா கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை விரைவாக முடிக்க இருக்கின்றனர். பொங்கலுக்கு படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளது.

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

இதற்கிடையே, மேலும் ஒரு தமிழ்ப் படத்தில் நிதி அகர்வால், கமிட் ஆகி இருப்பதாகக் கூறப்படுகிறது. அருண் விஜய் இரண்டு வேடங்களில் நடித்த 'தடம்' படத்தை அடுத்து, மகிழ் திருமேனி இயக்கும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கிறார். இதன் ஷூட்டிங், அடுத்த மாதம் 4 ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது.

பக்கா ஆக்‌ஷன்

பக்கா ஆக்‌ஷன்

இந்தப் படத்தில், முதலில் அனு இம்மானுவேல் ஹீரோயினாக நடிப்பதாகக் கூறப்பட்டது. இப்போது அவர் மாற்றப்பட்டுள்ளார். நிதி அகர்வால் ஹீரோயினாக நடிக்கிறார் என்றும் பக்கா ஆக்‌ஷன் படமான இது, வித்தியாசமான கதை அமைப்பைக் கொண்டது என்றும் ஹீரோயினுக்கும் முக்கியத்துவம் இருக்கிறது என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X