ஆபாச உடை அணிந்தால் இப்படித்தான் நடக்கும்.. நிதி அகர்வாலை வம்பிழுத்த நடிகர்.. பதிலடி கொடுத்த நடிகை!
சென்னை: ஹைதராபாத்தில் கடந்த வாரம் 'ராஜாசாப்' படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க வந்த நடிகை நிதி அகர்வாலை ரசிகர்கள் திடீரென சூழ்ந்து கொண்டு அவரிடம் எல்லை மீறி நடந்து கொண்டனர். இது பேசுபொருளான நிலையில், இதுகுறித்து பேசிய நடிகர் ஒருவர், ஆபாசமாக உடை அணிந்து பொதுஇடத்திற்கு வந்தால், இப்படித்தான் நடக்கும் என பேசி இருந்தார். இதற்கு நிதி அகர்வால் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
இயக்கிய மாருதி இயக்கி 'தி ராஜா சாப்' இப்படத்தில், சஞ்சய் தத், நிதி அகர்வால், ரித்தி குமார், மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் 'சஹானா சஹானா' பாடல் வெளியீட்டு விழா கடந்த வாரம் ஹைதராபாத்தில் தனியார் மாலில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகை நிதி அகர்வால் கலந்து கொண்டார். அப்போது, நிதி அகர்வாலை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள் அவரை தவறான இடத்தில் தொட்டு எல்லை மீறி நடந்து கொண்டனர். கட்டுக்கடங்காத கூட்டத்திற்குள் சிக்கி நடிகை நிதி அகர்வால் துவண்டு போனார். இதையடுத்து, நிதி அகர்வாலின் பாதுகாவலர்கள், கூட்டத்தில் இருந்து அவரை மீட்டு, காரில் ஏற்றி அனுப்பினார்கள். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

நடிகர் சர்ச்சை பேச்சு: இதுகுறித்து, தண்டோரா திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய தெலுங்கு நடிகர் சிவாஜி, பெண் எப்போதும் அழகானவர்கள். புடவை அணிந்து வரும் பெண்களின் அழகே தனி ரகம். ஆபாசமாக உடல் பாகங்கள் தெரியும் படி உடைகள் அணிவது பெண்களுக்கு நல்லது இல்லை. ஹீரோயின்கள் பொது நிகழ்ச்சி வரும் பொது சற்று கவனமாக உடை அணிந்து வர வேண்டும், அப்படி வரவில்லை என்றால், நடக்கக்கூடாதது நடந்துவிடும், பிரச்சனையை உங்களுக்குத்தான் என மேடையில் பேசி இருந்தார். அவரின் இந்த பேச்சு சர்ச்சைக்குள்ளான நிலையில், தெலுங்கு நடிகை அனசுயா கடுமையாக கண்டித்து இருந்தார்.
சரியான பதிலடி: அதே போல, பாடகி சின்மயி, பெண்களின் ஆடை பற்றி பேசும் அந்த நடிகர். "அவரே ஜீன்ஸ் மற்றும் ஹூடி அணிகிறார். அவர் வேட்டி மட்டுமே அணிந்து இந்திய கலாச்சாரத்தைப் பின்பற்ற வேண்டும். அவருக்கு திருமணமாகி இருந்தால், திருமணமானவர் என்பதைக் குறிக்க கங்கணம் மற்றும் மெட்டி அணிய வேண்டும். இங்கு பெண்கள் நடத்தப்படும் விதம் நம்பமுடியாத ஒன்றாக உள்ளது என தனது ஆதங்கத்தை பதிவிட்டு இருந்தார். தெலுங்கு நடிகர் சிவாஜியின் மோசமான பேச்சு பதிலடி கொடுத்துள்ள நடிகை நிதி அகர்வால், "Blaming a Victim is called Manipulation" என தனது கோவத்தை வெளிப்படுத்தி உள்ளார்.


Click it and Unblock the Notifications











