என்ன இப்படி சொல்லிட்டாப்ல.. 'சினிமாவில் 90 சதவிகிதம் அதிர்ஷ்டம்தான்..' சிம்பு ஹீரோயின் உறுதி!

By

சென்னை: சினிமாவில் என்ன இருந்தாலும் அதிர்ஷ்டம் முக்கியமான விஷயம் என்று சிம்பு பட ஹீரோயின் தெரிவித்துள்ளார்.

Recommended Video

DIRECTOR SUSEENTHIRAN ரொம்ப கலாய்ப்பாரு | ACTRESS NIDHHI AGERWAL CHAT PART - 01 | Filmibeat Tamil

இந்தியில், முன்னா மைக்கேல் என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நிதி அகர்வால்.

பின்னர் தெலுங்குக்கு சென்ற அவர் , சவ்யாசாச்சி, மிஸ்டர் மஞ்சு படங்களில் நடித்தார்.

ஐஸ்மார்ட் சங்கர்

ஐஸ்மார்ட் சங்கர்

இந்தப் படங்களில் ஹிட்டாகவில்லை. அடுத்து, ஐஸ்மார்ட் சங்கர் என்ற படத்தில் நடித்தார். ராம் ஹீரோவாக நடித்திருந்த இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. புரி ஜெகநாத் இயக்கியிருந்தார். இதையடுத்து மேலும் சில படங்களில் கமிட் ஆகி இருக்கிறார். பவன் கல்யாண் ஜோடியாக அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார்.

சிம்பு ஜோடியாக

சிம்பு ஜோடியாக

தமிழில், சிம்பு ஜோடியாக ஈஸ்வரன், ஜெயம் ரவி ஜோடியாக பூமி ஆகிய படங்களில் நடித்திருந்தார். இதையடுத்து மகிழ் திருமேனி இயக்கத்தில், உதயநிதி ஹீரோவாக நடிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில், அவர் அளித்த பேட்டியில், சினிமாவில் அதிர்ஷ்டம் முக்கியம் என்று கூறியுள்ளார்.

அதிர்ஷ்டம் முக்கியம்

அதிர்ஷ்டம் முக்கியம்

அவர் மேலும் கூறும்போது, நீங்கள் எவ்வளவு நன்றாக நடித்தாலும் நடிக்கவில்லை என்றாலும் சினிமாவில் அதிர்ஷ்டம் முக்கியம். அதை ஒப்புக்கொள்கிறேன். சில கதைகள் ஸ்கிரிப்டில் ஆச்சரியமாக இருக்கும். ஆனால், படமாக வரும்போது வேறு மாதிரி இருக்கும். அதனால் 90 சதவிகிதம் அதிர்ஷ்டம், நம் பக்கம் இருக்க வேண்டும்.

எல்லாமே வியாபாரம்

எல்லாமே வியாபாரம்

இந்தி, தெலுங்கு, தமிழ் படங்களில் நடிப்பதை பற்றி கேட்கிறார்கள். நாள் முடிவில் எல்லாமே வியாபாரம்தான். நான் அப்படி பார்க்கவில்லை என்றாலும் தயாரிப்பாளர்களின் பார்வையில் அது வியாபாரமாகத்தான் முடிகிறது. ஒவ்வொரு இயக்குனர்களும் ஒவ்வொரு விதமான பார்வையில் படமாக்குகிறார்கள். அவர்களுக்கு நன்றி சொல்ல கடன்பட்டிருக்கிறேன்.

வித்தியாசம் இல்லை

வித்தியாசம் இல்லை

நடிகையாக இருக்கும்போது, சமூக வலைதளங்களிலோ, அல்லது நேரில் யாரையும் சந்திக்கும்போதோ உங்களுக்குச் சொல்ல அவரவர்களிடம் அறிவுரைகள் இருக்கிறது. ஒவ்வொருவர் சொல்லும் அந்த அட்வைஸ்களில் அதிக வித்தியாசம் இருக்காது. உங்களுக்கு அதிகம் வேண்டியவர்களும் அறிவுரை சொல்வார்கள். இதில் எதை எடுத்துக்கொள்வது என்று குழப்பம் ஏற்படுவது சகஜம் என்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X