எனக்கு கோயில் கட்டினீங்கள.. இப்போ இதையும் பண்ணுங்க.. சிம்பு ஹீரோயின் போட்ட அதிரடி கண்டிஷன்!

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரே நாளில் ஒடிடி மற்றும் தியேட்டரில் வெளியான தமிழ் படங்கள் மூலம் கோலிவுட்டில் கால் பதித்தவர் நடிகை நிதி அகர்வால்.

Recommended Video

எனக்கு கோவில் வேண்டாம்... ஏழைகளுக்கு உதவுங்கள்… ரசிகர்களுக்கு நிதி அகர்வால் வேண்டுகோள்!

குஷ்பு, நயன்தாராவை தொடர்ந்து நடிகை நிதி அகர்வாலுக்கும் ரசிகர்கள் கோயில் கட்டி பாலாபிஷேகம் எல்லாம் செய்தனர்.

இந்நிலையில், தனக்கு கோயில் கட்டின ரசிகர்களிடம் நிதி அகர்வால் ஒரு சூப்பரான கோரிக்கை வைத்துள்ளார்.

பூமி நாயகி

பூமி நாயகி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான ஜெயம் ரவியின் பூமி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை நிதி அகர்வால். அந்த படத்தில் அவருக்கு குறைவான போர்ஷனே இருந்தாலும் நல்லாவே நடித்திருந்தார்.

சிம்புவுக்கு ஜோடியாக

சிம்புவுக்கு ஜோடியாக

அதே நாளில் தியேட்டரில் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படத்திலும் நிதி அகர்வால் தான் ஹீரோயின். கோலிவுட்டில் ஒரே நாளில் இரு படங்களில் அறிமுகமான நடிகை நிதி அகர்வாலுக்கு ஏகப்பட்ட இளைஞர்கள் ரசிகர்களாகி உள்ளனர். டோலிவுட், பாலிவுட் என கலக்கி வரும் இவருக்கு கோயிலையும் கட்டி உள்ளனர்.

கோயில் கட்டிய ரசிகர்கள்

கோயில் கட்டிய ரசிகர்கள்

தமிழில் இரண்டே படங்களில் நடித்துள்ள நடிகை நிதி அகர்வாலுக்கு சென்னை காட்டுப்பாக்கத்தை சேர்ந்த ரசிகர்கள் திடீரென கோயில் ஒன்றை உருவாக்கி, அதில் நிதி அகர்வாலின் திருவுருவ சிலையை வைத்து பாலாபிஷேகம் செய்து வரும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் ஷேர் செய்து வைரலாக்கினார்.

ஆடிப் போன நிதி

ஆடிப் போன நிதி

கோலிவுட் ரசிகர்களின் இப்படியொரு அன்பை பார்த்து ஆடியே போய்விட்டார் நிதி அகர்வால். தனக்கு இப்படியொரு அன்பை செலுத்தும் ரசிகர்களை எண்ணி ரொம்பவே பூரிப்படைந்துள்ளேன் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள நிதி அகர்வால், அந்த ரசிகர்களிடம் ஒரு கோரிக்கையும் வைத்துள்ளார்.

என்ன கோரிக்கை

என்ன கோரிக்கை

அப்படி என்ன கோரிக்கை என்று பார்த்தால், எனக்காக கோயில் கட்டிய ரசிகர்களுக்கு நன்றி, ஏற்கனவே என் பெயரில் ஏகப்பட்ட நலத்திட்ட பணிகளை செய்து வருகிறீர்கள். இந்த கோயிலை உணவும் கல்வியும் கொடுக்கும் உறைவிடமாக மாற்றுங்கள், சிலருக்கு அதன் மூலம் உதவி கிடைத்தால் உண்மையாகவே நான் ரொம்ப சந்தோஷப்படுவேன் என கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் நிதி அகர்வால்.

இட்லி பைத்தியம்

இட்லி பைத்தியம்

பவன் கல்யாணின் புதிய படத்திலும், மகிழ்த்திருமேனி இயக்கவுள்ள புதிய படத்திலும் நடிக்க கமீட் ஆகியுள்ள நிதி அகர்வாலுக்கு இட்லி என்றால் ரொம்ப பிடிக்கும். எந்தவொரு பேட்டியிலும் அவரிடம் உங்களுக்கு பிடித்த தென்னிந்திய உணவு என்ன என்று கேட்டால், உடனே அவரது வாயில் இருந்து வருவது இட்லி மட்டும் தான். நிதி அகர்வாலின் இந்த கோரிக்கையை நிச்சயம் அவரது ரசிகர்கள் ஏற்று அந்த கோயிலை உணவும் கல்வியும் கொடுக்கும் இடமாக மாற்றுவார்கள் என்பது உறுதி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X