Nidhhi Agerwal: பிணந்தின்னி கழுகுகளாக மாறிய பிரபாஸ் ரசிகர்கள்.. கூட்டத்தில் நசுங்கிய நிதி அகர்வால்
ஹைதராபாத்: பிரபாஸ் நடிப்பில் வரும் பொங்கலுக்கு 'ராஜாசாப்' திரைப்படம் வெளியாகிறது. அந்த படத்தின் 'சஹானா சஹானா' பாடல் வெளியீட்டு விழா நேற்று ஹைதராபாத்தில் உள்ள தனியார் மாலில் நடைபெற்றது. அந்த விழாவில் பங்கேற்ற நடிகை நிதி அகர்வாலை பிரபாஸ் ரசிகர்கள் சூழ்ந்துக் கொண்டு நசுக்கிய காட்சிகள் பலரையும் பதற வைத்துள்ளது.
பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிப்பில் இயக்குநர் மாருதி இயக்கத்தில் பிரபாஸ், நிதி அகர்வால், மாளவிகா மோகனனன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடிப்பில் காஞ்சனா ஸ்டைலில் உருவாகியுள்ள பேய் படம் தான் ராஜாசாப். கோடேகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பு பணிகளையும், கார்த்திக் பலானி ஒளிப்பதிவு பணியை மேற்கொண்டுள்ளார். தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி ஜன நாயகன் படத்துடன் நேரடியாக படம் மோதுகிறது.
தி ராஜா சாப்: மூதாதையர்களின் சொத்தான பெரிய மாளிகை பயன்படுத்தப்படாமல் இருப்பதால், பண பிரச்சனை காரணமாக விற்க முயற்சி செய்கிறார். ஆனால், அந்த பழைய அரண்மனையில், அமானுஷ்ய சக்தி உள்ளது என்பதை தெரிந்து கொண்ட பிரபாஷ், அமானுஷ்ய சக்தி நிறைந்த அந்த அரண்மனையை தீய சக்திகளிடம் இருந்து மீட்க அரண்மனைக்குள் செல்கிறார். அதன் பின் என்ன நடந்தது என்பது தான் "ராஜாசாப்" திரைப்படத்தின் கதை. அதிரடியான திருப்படங்களுடன் திகிலூட்டும் நகைச்சுவை திரைப்படமான உருவாகி இருக்கும் இப்படத்தில் பிரபாஸ் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நிதிஅகர்வால் மற்றும் மாளவிகா மோகனன் நடித்துள்ளனர்.

பாவம் நிதி அகர்வால்: இந்நிலையில் நேற்று, 'தி ராஜா சாப்' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகை நிதி அகர்வால் கலந்து கொண்டார். நிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கும் போதே, அரங்கில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால், சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து நிகழ்ச்சி முடிந்து நிதி அகர்வால் கிளம்பிய போது, கட்டுக்கடங்காத ரசிகர்கள் கூட்டம் நிதி அகர்வாலை சூழ்ந்துகொண்டு, அவரைத் தள்ளியும், அநாகரீகமாகத் தொட்டும் அவரை துன்புறுத்தினர். இதனால், நடிகை நிதி அகர்வால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார். இதை கண்ட அவரது பாதுகாவலர்கள் உடனடியாகச் செயல்பட்டு, அவரை கூட்டத்திலிருந்து விலக்கி மீட்டு காரில் ஏற்றினர். காரில் ஏறிய நிதி அகர்வால் சிறிது நேரம், முகத்தை மூடிய படி அமர்ந்து வேதனை அடைந்தார். இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பிணந்தின்னி கழுகுகளா: இந்த சம்பவத்தை கண்டித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இது மிகவும் மோசமான செயல், என்றும் கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லையா என்றும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். விழாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக செய்யப்படவில்லை, பொது இடங்களில் நடிகைகளுக்குப் போதுமான பாதுகாப்பு ஏன் வழங்கப்படுவதில்லை? என்ற கேள்வியையும் பலர் கேட்டுள்ளனர். சமீபகாலமாக, பொது நிகழ்ச்சிகளில் பிரபலங்கள் எதிர்கொள்ளும் இதுபோன்ற அத்துமீறல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











