முதல்ல கிரிக்கெட் வீரர், இப்போ இவர்.. அந்த இளம் ஹீரோவை காதலிக்கிறாரா சிம்பு ஹீரோயின்?

By

சென்னை: தெலுங்கு ஹீரோவை காதலிப்பதாக வந்த தகவலை சிம்பு பட ஹீரோயின் மறுத்துள்ளார்.

தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக 'பூமி' படத்தில் நடித்துள்ளார், நிதி அகர்வால். இதன் ஷூட்டிங் முடிந்துவிட்டது

படத்தை லக்‌ஷ்மண் இயக்குகிறார். இதையடுத்து இப்போது சிம்பு ஜோடியாக நடித்து வருகிறார்.

பொங்கல் ரிலீஸ்

பொங்கல் ரிலீஸ்

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தில் இவர்தான் ஹீரோயின். இதன் ஷூட்டிங் திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் நடந்து வருகிறது. திரு ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. அதற்கான வேலைகள் பரபரப்பாக நடந்து வருகின்றன.

ஐஸ்மார்ட் சங்கர்

ஐஸ்மார்ட் சங்கர்

இந்தியில், முன்னா மைக்கேல் என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நிதி அகர்வால். பின்னர் தெலுங்குக்கு வந்த இவர், சவ்யாசாச்சி, மிஸ்டர் மஞ்சு ஆகிய படங்களில் நடித்தார். இந்தப் படங்கள் ஹிட்டாகவில்லை. அடுத்து, புரி ஜெகநாத் இயக்கிய ஐஸ்மார்ட் சங்கர் என்ற படத்தில் நடித்தார்.

கிசுகிசுக்கப் பட்டவர்

கிசுகிசுக்கப் பட்டவர்

ராம், ரபா நடேஷ் உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. புரி ஜெகநாத்தும் நடிகை சார்மியும் இணைந்து தயாரித்திருந்தனர். இதையடுத்து மேலும் சில தெலுங்கு படங்களில் ஒப்பந்தமாகி இருக்கும் நடிகை நிதி அகர்வால், ஏற்கனவே கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலுடன் கிசுகிசுக்கப்பட்டவர்.

ஹீரோவுடன் டேட்டிங்

ஹீரோவுடன் டேட்டிங்

அதை மறுத்திருந்த அவர், நாங்கள் நண்பர்கள்தான், சிறுவயதில் இருந்தே ஒருவரை ஒருவர் தெரியும், அதனால் எங்களுக்குள் வேறு ஏதுமில்லை என்று முன்பு கூறியிருந்தார். இந்நிலையில் தெலுங்கு ஹீரோ ஒருவருடன் டேட்டிங் செல்வதாக செய்திகள் வெளியாயின. இதையும் அவர் மறுத்துள்ளார்.

Recommended Video

'Just another day all things green' - Nidhhi Agerwal shared fitness video on Instagram
நடிப்பில் கவனம்

நடிப்பில் கவனம்

தான் யாரையும் காதலிக்கவில்லை என்றும் தற்போது நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். நடிகை நிதி அகர்வால், கொரோனா லாக்டவுன் நேரத்தில் தான் தமிழ்க் கற்றுவருவதாகக் கூறியிருந்தார். தமிழ்க் கற்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X