இன்று முதல் இரவு நேர ஊரடங்கு.. தமிழகத்தில் திரையரங்குகளில் இரவு காட்சிகள் ரத்து!

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலாக உள்ள நிலையில் திரையரங்குகளில் இரவு நேர காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அசுர வேகத்தில் பரவி வருகிறது.

பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பரவல் எண்ணிக்கை நாள்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

கட்டுப்பாடுகள்

கட்டுப்பாடுகள்

தமிழகத்திலும் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. இதனை முன்னிட்டு தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

இரவு நேர ஊரடங்கு

இரவு நேர ஊரடங்கு

அதன்படி தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படவுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதனை முன்னிட்டு பேருந்துகள் இயக்கம், கடைகள் திறப்பு உள்ளிட்டவற்றிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இரவு காட்சி ரத்து

இரவு காட்சி ரத்து

இந்நிலையில் இரவுநேர ஊரடங்கை முன்னிட்டு தமிழகத்தில் இன்று முதல் திரையரங்குகளில் இரவு நேரக் காட்சி ரத்து செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் வீடியோ கான்ஃபிரன்ஸிங் மூலம் ஆலோசனை நடத்தினர்.

நேரம் மாற்றம்

நேரம் மாற்றம்

அதன் அடிப்படையில் அடுத்த 10 நாட்களுக்கு திரையரங்குகளில் படங்கள் திரையிடும் நேரத்தை மாற்ற திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். மேலும் இரவு காட்சிகளை ரத்து செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X