வெளிநாட்டு டூர்.. காதல் கணவருடன் மெகா குடும்ப நடிகையின் ரொமான்டிக் போஸ்.. வேகமாக பரவும் போட்டோ!
ஐதராபாத்: கடந்த மாதம் திருமணம் செய்துகொண்ட மெகா குடும்பத்து நடிகையின் ரொமான்டிக் போட்டோஸ், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழில், வேட்டை, விழித்திரு உட்பட சில படங்களில் நடித்திருப்பவர் தெலுங்கு நடிகர் நாகபாபு.
இவர், மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி. இவர் மகள் நடிகை நிஹரிகா கோனிடேலா.

தமிழ் அறிமுகம்
தயாரிப்பாளராகவும் நடிகையாகவும் இருக்கும் இவர் தமிழிலும் நடித்துள்ளார். 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இதில் விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக் நடித்திருந்தனர். நிஹரிகாவுக்கும் ஐதராபாத்தைச் சேர்ந்த பொறியாளர் சைதன்யா என்பவரும் காதலித்து வந்தனர்.

தெலுங்கு முறைப்படி
காதலுக்கு இரு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, இவர்கள் நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ஆகஸ்ட் மாதம் நடந்தது. திருமணம், உதய்பூரில் உள்ள ஓபராய் உடைவிலாஸ் அரண்மனை ஓட்டலில் டிசம்பர் 9 ஆம் தேதி நடந்தது. இந்த திருமணம் தெலுங்கு முறைப்படி நடந்தது.

வரவேற்பு நிகழ்ச்சி
திருமணத்தில் நடிகர்கள் சிரஞ்சீவி, அவர் தம்பி பவன் கல்யாண், வருண் தேஜ், ராம்சரண், அல்லு அர்ஜுன் உட்பட பல சினிமா பிரபலங்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். பின்னர். டிசம்பர் 11 ஆம் தேதி வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

ஹனிமூன் பயணம்
திருமண ஏற்பாடுகளை நிஹரிகாவின் சகோதரரும் நடிகருமான வருண் தேஜ் செய்திருந்தார். இவர்கள் திருமணப் புகைப்படங்கள் மற்றும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தன. இந்நிலையில், மணமக்கள் ஹனிமூனுக்காக மாலத்தீவு சென்றுள்ளனர். அங்கிருந்தபடி புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

மூக்கால் உரசியபடி
அவர் இப்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் செம ரொமான்டிக்காக போஸ் கொடுத்துள்ளார். அதில் நிஹரிகாவும் அவர் காதல் கணவரும் மூக்கால் உரசியபடி, ஒருவரை ஒருவர் பார்த்தவாறு இருக்கின்றனர். மற்றொரு போட்டோவுக்கு, மேலே வானம், கீழே மணல், உள்ளே அமைதி என்று கேப்ஷன் கொடுத்துள்ளார்.

ரொமான்டிக் ஜோடி
இந்த புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். பல நெட்டிசன்ஸ், சூப்பர் ஜோடி என்றும் அண்ணனும் அண்ணியும்.. செம ரொமான்டிக் ஜோடி என்றும் கூறியுள்ளனர். சிலர் அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











