எல்லாரும் அங்கேயே போறாங்களே.. காதல் கணவருடன் வெளிநாட்டுக்கு ஹனிமூன் சென்ற பிரபல நடிகை!

By

ஐதராபாத்: சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகைம் ஹனிமூனுக்கு வெளிநாடு சென்றுள்ளார்.

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி, நாகபாபு. இவர் தமிழில், வேட்டை, விழித்திரு உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

இவர் மகள் நிஹரிகா. தயாரிப்பாளராகவும் நடிகையாகவும் இருக்கும் இவர் தமிழிலும் நடித்துள்ளார்.

நட்சத்திர ஓட்டல்

நட்சத்திர ஓட்டல்

'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படம் மூலம் தமிழில் அறிமுகமானார் நிஹரிகா. இதில் விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக் நடித்திருந்தனர். இவருக்கும் ஐதராபாத்தைச் சேர்ந்த பொறியாளர் சைதன்யா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இவர் போலீஸ் உயரதிகாரி ஒருவரின் மகன்.

அரண்மனை ஓட்டல்

அரண்மனை ஓட்டல்

நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ஆகஸ்ட் மாதம் நடந்தது.
திருமணம், உதய்பூரில் உள்ள ஓபராய் உடைவிலாஸ் அரண்மனை ஓட்டலில் கோலாகலமாக டிசம்பர் 9 ஆம் தேதி நடந்தது. இந்த திருமணம் தெலுங்கு முறைப்படி நடந்தது.

பவன் கல்யாண்

பவன் கல்யாண்

விழாவில் விருந்தினர்களுக்கு தங்கத் தட்டுகளில் உணவு பரிமாறப்பட்டதாகக் கூறப்பட்டது. திருமணத்தில் நடிகர்கள் சிரஞ்சீவி, அவர் தம்பி பவன் கல்யாண், வருண் தேஜ், ராம்சரண், அல்லு அர்ஜுன் உட்பட பல சினிமா பிரபலங்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

கோயில்களுக்கு விசிட்

கோயில்களுக்கு விசிட்

பின்னர். டிசம்பர் 11 ஆம் தேதி வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. திருமண ஏற்பாடுகளை நிஹரிகாவின் சகோதரரும் நடிகருமான வருண் தேஜ் செய்திருந்தார். இவர்கள் திருமணப் புகைப்படங்கள் மற்றும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அவர்கள் கோயில்களுக்கு விசிட் செய்திருந்தனர்.

மாலத்தீவில் ஹனிமூன்

மாலத்தீவில் ஹனிமூன்

இந்நிலையில், மணமக்கள் இருவரும் இப்போது ஹனிமூனுக்காக வெளிநாடு சென்றுள்ளனர். இதை நிஹரிகா, இன்ஸ்டா ஸ்டோரியில் தெரிவித்துள்ளார். அவர்கள் மாலத்தீவுக்கு சென்றுள்ளனர். நடிகை காஜல் அகர்வாலும் தனது ஹனிமூனுக்கு அந்த தீவுக்குத்தான் சென்றிருந்தார்.

Recommended Video

நான் ஹீரோயின் மெட்டீரியல் இல்லை என்று நடிகை நிஹாரிகா கொனிடெலா தெரிவித்துள்ளார்.
புகைப்பட அப்டேட்

புகைப்பட அப்டேட்

மேலும் பல நடிகர், நடிகைகளும் அந்த தீவுக்கு சென்றிருந்தனர். அங்கிருந்தபடியே, தங்கள் சோசியல் மீடியா பக்கங்களில் புகைப்படங்களாக வெளியிட்டு இருந்தனர். இந்நிலையில் நடிகை நிஹரிகாவும் விரைவில் அங்கிருந்து புகைப்படங்களாக அப்டேட் செய்வார் என எதிர்பார்க்கலாம் என்கிறார்கள் ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X