டிசம்பர் 9 ஆம் தேதி.. உதய்பூரில் பிரமாண்ட திருமணம்.. குவாரன்டைனில் மெகா குடும்பத்து ஹீரோயின்!

By

ஐதராபாத்: டிசம்பரில் நடக்கும் திருமணத்துக்காக, மெகா குடும்பத்து நடிகை இப்போதே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருபவர், நடிகை நிஹாரிகா கோனிடேலா.

தமிழில், 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படம் மூலம் அறிமுகமானார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக் நடித்திருந்தனர்.

ஹேப்பி வெட்டிங்

ஹேப்பி வெட்டிங்

நிஹரிகா, மெகா ஸ்டார் சிரஞ்சீவி தம்பி, நாகபாவுவின் மகள். இவரை பெரிய குடும்பத்து நடிகை என்று கூறுகின்றனர். தயாரிப்பாளராகவும் இருக்கும் நிஹரிகா, 2016-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான, ஒக்க மனசு மூலம் சினிமாவில் அறிமுகமானவர். ஹேப்பி வெட்டிங், சூர்யகாந்தம், சைரா நரசிம்ம ரெட்டி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

பொறியாளர் சைதன்யா

பொறியாளர் சைதன்யா

நிஹரிகாவுக்கும் ஐதராபாத்தைச் சேர்ந்த பொறியாளர் சைதன்யா என்பவருக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டுள்ளது. நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ஆகஸ்ட் மாதம் நடந்தது. கொரோனா பரவல் காரணமாக நெருங்கிய உறவினர்கள் இதில் கலந்துகொண்டனர்.

டிசம்பர் திருமணம்

டிசம்பர் திருமணம்

இதில் நடிகர் சிரஞ்சீவி, ராம்சரண் தேஜா, அல்லு அர்ஜூன் உள்பட அவர்கள் குடும்பத்தினர் கலந்துகொண்டனர். திருமணம் டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி நடக்கிறது. ஐதராபாத்தில் எளிமையாக நடக்கும் என்று முதலில் கூறப்பட்டது. இப்போது உதய்பூரில் உள்ள ஓபராய் உடைவிலாஸ் அரண்மனை ஓட்டலில் திருமணம் நடக்கிறது.

உதய்பூர் சென்றனர்

உதய்பூர் சென்றனர்

திருமண ஏற்பாடுகளை நிஹரிகாவின் சகோதரர் வருண் தேஜ் கவனித்து வருகிறார். இந்நிலையில் கொரோனா காரணமாக, 15 நாள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பதால், மணப்பெண் நிஹரிகா, மணமகன் சைதன்யா மற்றும் இரு குடும்பத்தினரும் இப்போதே திருமணம் நடக்கும் உதய்பூருக்குச் சென்றுவிட்டனர்.

Recommended Video

Actor Vijay Devarkonda: விஜய் தேவரகொண்டா சிரஞ்சீவி வீட்டு மருமகனாகப் போவது உண்மையில்லை- வீடியோ
வரவேற்பு விழா

வரவேற்பு விழா

நிஹரிகா உள்பட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. திருமணம் முடிந்த சில நாட்களுக்குப் பிறகு ஐதராபாத்தில் வரவேற்பு விழாவை நடத்த இருப்பதாகவும் தெரிகிறது. இந்த திருமணத்தில், நடிகர்கள் சிரஞ்சீவி, பவன் கல்யாண், ராம்சரண் தேஜா, அல்லு அர்ஜுன் உள்பட அவருடைய நெருங்கிய உறவினர்கள் கலந்து கொள்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X