லாக்டவுன் விழா.. சொந்தங்கள் முன்னிலையில்.. பெரிய குடும்பத்து ஹீரோயினுக்கு திடீர் நிச்சயதார்த்தம்!

By

ஐதராபாத்: பிரபல நடிகைக்கு நட்சத்திர ஓட்டல் ஒன்றில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

Recommended Video

Actor Vijay Devarkonda: விஜய் தேவரகொண்டா சிரஞ்சீவி வீட்டு மருமகனாகப் போவது உண்மையில்லை- வீடியோ

கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதை அடுத்து அதை தடுக்க மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இருந்தும் இந்த தொற்று அதிகமாக பரவுகிறது. இதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

தள்ளி வைத்துள்ளனர்

தள்ளி வைத்துள்ளனர்

இந்த வைரஸ் காரணமாக, பலர் தங்கள் திட்டங்களை மாற்றி வைத்துள்ளனர். சிலர் தங்கள் திருமணங்களைத் தள்ளி வைத்துள்ளனர். சிலர் கொரோனா லாக்டவுனிலேயே திருமணம் செய்துகொண்டனர். தெலுங்கு நடிகர் நிகில் சித்தார்த்தா, நிதின் ஆகியோர் திருமணம் லாக்டவுனில் நடந்தது. நடிகர் ராணா- மிஹீகா திருமணம் கடந்த 8 ஆம் தேதி ஐதரபாத்தில் நடந்தது.

நடிகை மியா ஜார்ஜ்

நடிகை மியா ஜார்ஜ்

நடிகை பிராச்சி தெஹ்லான் திருமணம் கடந்த 7 ஆம் தேதி டெல்லியில் நடந்தது. சில மலையாள நடிகர்களின் திருமணமும் லாக்டவுனில் நடைபெற்றன. நடிகை மியா ஜார்ஜ் தனது திருமணத்தை இப்போது நடத்துவதா, கொரோனா முடிந்தபிறகு நடத்துவதா என்று குழப்பத்தில் இருப்பதாகக் கூறியிருந்தார். இதே போல மேலும் சிலரும் தங்கள் திருமணத்தை தள்ளி வைத்துள்ளனர்.

நடிகை நிஹரிகா

நடிகை நிஹரிகா

இந்நிலையில் நடிகை நிஹரிகா திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் நேற்று மாலை நடந்தது. தமிழில், 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படத்தின் மூலம் அறிமுகமானவர் இவர். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக் நடித்திருந்தனர். நிஹரிகா, மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி, நாகபாவுவின் மகள். தெலுங்கில் நடிகையாகவும் தயாரிப்பாளராகவும் இருக்கிறார் நிஹரிஹா.

பொறியாளர்

பொறியாளர்

இப்போது தமிழில் அசோக் செல்வன் ஜோடியாக புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். ஸ்வாதினி இயக்கும் இந்தப் படத்தை கெனன்யா பிலிம்ஸ் தயாரிக்கிறது. ஷூட்டிங்கிற்கு அனுமதி கிடைத்தபின் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இதற்கிடையே, நடிகை நிஹரிகாவுக்கும் ஐதராபாத்தைச் சேர்ந்த பொறியாளர் சைதன்யா என்பவருக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டிருந்தது.

நிச்சயதார்த்தம்

நிச்சயதார்த்தம்

இதையடுத்து திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நேற்று நடந்தது. கொரோனா பரவல் காரணமாக நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்துகொண்டனர். இதில் நடிகர் சிரஞ்சீவி, ராம்சரண் தேஜா, அல்லு அர்ஜூன் உள்பட அவர்கள் குடும்பத்தினர் கலந்துகொண்டனர். இவர்கள் திருமணம் டிசம்பர் மாதம் நடக்கும் எனத் தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X