ராயல் ஸ்டைலில் கோலாகலமாக நடந்த பிரபல நடிகையின் திருமணம்.. ஆனந்த கண்ணீர் விட்ட நடிகர்!
உதய்பூர்: பிரபல நடிகை நிஹரிகாவின் திருமணம் ராயல் ஸ்டைலில் கோலாகலமாக நேற்றிரவு நடந்தது.
பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி, நாகபாபு. இவர் தமிழில், வேட்டை, விழித்திரு உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.
இவர் மகள் நிஹரிகா. தயாரிப்பாளராகவும் நடிகையாகவும் இருக்கும் இவர் தமிழிலும் நடித்துள்ளார்.

நட்சத்திர ஓட்டல்
'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படம் மூலம் தமிழில் அறிமுகமானார் நிஹரிகா. இதில் விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக் நடித்திருந்தனர். இவருக்கும் ஐதராபாத்தைச் சேர்ந்த பொறியாளர் சைதன்யா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ஆகஸ்ட் மாதம் நடந்தது.

ஓபராய் உடைவிலாஸ்
கொரோனா பரவல் காரணமாக நெருங்கிய உறவினர்கள் மட்டும் இதில் கலந்துகொண்டனர். திருமணம் உதய்பூரில் உள்ள ஓபராய் உடைவிலாஸ் அரண்மனை ஓட்டலில் கோலாகலமாக நேற்று மாலை 7.15 மணிக்கு நடந்தது. ராயல் ஸ்டைலில் பிரமாண்டமாக இந்த திருமணம் நடந்தது.

ராயல் லுக்
மணப்பெண் நிஹரிகா, பிரத்யேகமாக உருவக்கப்பட்ட தங்க நிறத்திலான பட்டுப்புடவையும் ஜாக்கெட்டும் அணிந்திருந்தார். சைதன்யா தங்க நிற ஷெர்வானி அணிந்திருந்தார். இருவரும் ராயல் லுக்கில் இருந்தனர். திருமணம் நடந்த இடம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. தெலுங்கு முறைப்படி இந்த திருமணம் நடந்தது.

ஆனந்த கண்ணீர்
மணமகன் தாலிகட்டும்போது, நிஹரிகாவின் தந்தை நாகபாபு ஆனந்தக் கண்ணீர் விட்டார். 'இது ஒரு சகாப்தத்தின் நிறைவு போல தெரிகிறது. பழைய நினைவுகள் என்னைத் தாக்குகிறது. அவள் முதல்நாள் பள்ளிக்குச் சென்றது போல உணர்கிறேன். இனி மாலைக்குள் திரும்பி வரமாட்டாள்' என்று தொடங்கி உருக்கமான பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

தங்கத் தட்டு
திருமண விழாவில் விருந்தினர்களுக்கு தங்கத் தட்டுகளில் உணவு பரிமாறப்பட்டதாகக் கூறப்படுகிறது. விழாவில் நடிகர்கள் சிரஞ்சீவி, அவர் தம்பி பவன் கல்யாண், வருண் தேஜ், ராம்சரண், அல்லு அர்ஜுன் உட்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.


Click it and Unblock the Notifications











