2வது திருமணத்திற்கு தயாராகும் சூப்பர் ஸ்டாரின் வாரிசு.. இளம் நடிகரை காதலிப்பதால் விரைவில் திருமணம்!
சென்னை: தெலுங்கு ஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரரும், தயாரிப்பாளர் நாகேந்திர பாபுவின் மகளான நடிகை நிஹாரிகா கொனிடெலாவிற்கு அண்மையில் விவாகரத்து கிடைத்த நிலையில், அவர் தன்னுடன் நடித்த இளம் நடிகர் ஒருவரை காதலித்து வருவதால், அவருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக இணையத்தில் செய்திகள் பரவி வருகின்றன.

நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யா, சமந்தா இணைந்து நடித்த போது இருவரும் காதலிக்க தொடங்கினர். இதையடுத்து இவர்களின் திருமணம்,கோவாவில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.இருவரும் சில ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த நிலைகள், கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். பின், நாக சைதன்யா சோபிதா துலிபாலாவுடன் நெருக்கமாக இருந்ததாகவும், இருவரும் டேட்டிங் சென்றதாகவும் இணையத்தில் செய்திகள பரவிய நிலையில் ஆகஸ்ட் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, கடந்த வாரம் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் இவர்களின் திருமணம் சிறப்பாக நடைபெற்றது.

சூப்பர் ஸ்டாரின் வாரிசு: தெலுங்கு சினிமாவின் பிரபலமான நடிகருக்கு கடந்த வாரம் இரண்டாவது திருமணம் நடைபெற்ற நிலையில், சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரரும் தயாருப்பாளருமான நாகேந்திர பாபுவின் மகளுக்கு விரைவில் இரண்டாவது திருமணம் நடைபெற உள்ளதாக இணையத்தில் செய்திகள் பரவி வருகின்றன. நடிகையான நிஹாரிகா ஒக்க மனசு,சைரான நரசிம்மா ரெட்டி போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும், தொலைக்காட்சி தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.

விவாகரத்து பெற்றனர்: இவர், ஐஜி பிரபாகர ராவ் ஜொன்னலகட்டாவின் மகனா சைதன்யாவை 2020ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருவரும் இரண்டு ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த நிலையில்,கருத்து வேறுபாடு காரணமாக 2023-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதில், சைதன்யாவுக்கு விரைவில் நடிகை ஒருவருடன் திருமணம் நடைபெற உள்ளதாக தெலுங்கு பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகி வருகிறது.

விரைவில் இரண்டாம் திருமணம்: இந்நிலையில், நடிகை நிஹாரிகாவும் நடிகர் ஒருவரை காதலித்து வருவதாகவும், இருவரும் பல இடத்தில் ஜோடியாக சுற்றி வருவதாகவும் செய்திகள் வெளியான நிலையில், நிஹாரிகா விரைவில் அந்த நடிகரை இரண்டாம் திருமணம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை தயாரிப்பாளர் நாகேந்திர பாபு தரப்பில் இருந்து விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications











