மாறியது இடம்.. பெரிய குடும்பத்து ஹீரோயினுக்கு கோவாவில் திருமணம்.. டிசம்பரில் நடக்கிறது!

By

ஐதராபாத்: பெரிய குடும்பத்து ஹீரோயின் திருமணம் கோவாவில் நடக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருபவர், நடிகை நிஹாரிகா கோனிடேலா.

தமிழில், 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படம் மூலம் அறிமுகமானார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக் நடித்திருந்தனர்.

எலிபன்ட் பிக்சர்ஸ்

எலிபன்ட் பிக்சர்ஸ்

நிஹரிகா, மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி, நாகபாவுவின் மகள். இதனால் இவரை பெரிய குடும்பத்து நடிகை என்று டோலிவுட்டில் கூறி வருகின்றனர். தயாரிப்பாளராகவும் இருக்கும் நிஹரிகா, 2016-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான, ஒக்க மனசு மூலம் சினிமாவில் அறிமுகமானவர். ஹேப்பி வெட்டிங், சூர்யகாந்தம், சைரா நரசிம்ம ரெட்டி ஆகிய படங்களில் நடித்துள்ளார். 'பிங்க் எலிபன்ட் பிக்சர்ஸ்' எனும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

திருமணத்தால் விலகல்

திருமணத்தால் விலகல்

இப்போது தமிழில் அசோக் செல்வன் ஜோடியாக புதிய படம் ஒன்றில் நடிக்க இருந்தார். ஸ்வாதினி இயக்கும் இந்தப் படத்தில் இருந்து, திருமணம் காரணமாக அவர் விலகினார். நிஹாரிகாவுக்கும் ஐதராபாத்தைச் சேர்ந்த பொறியாளர் சைதன்யா என்பவருக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டிருந்தது.

உறவினர்கள் மட்டுமே

உறவினர்கள் மட்டுமே

திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ஆகஸ்ட் மாதம் நடந்தது. கொரோனா பரவல் காரணமாக நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்துகொண்டனர். இதில் நடிகர் சிரஞ்சீவி, ராம்சரண் தேஜா, அல்லு அர்ஜூன் உள்பட அவர்கள் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

இடம் மாற்றம்

இடம் மாற்றம்

திருமணம் டிசம்பர் மாதம் நடக்கிறது. ஐதராபாத்தில் எளிமையாக நடக்கும் என்று முதலில் கூறப்பட்டது. இந்நிலையில் இவர்கள் திருமணம் நடக்கும் இடம் மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கோவாவில் நடக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் சைதன்யா மற்றும் தோழிகளுடன் கோவா சென்று இருந்தார் நிஹாரிகா.

கோவா மேரேஜ்

கோவா மேரேஜ்

அங்கு திருமணத்துக்காக ரிசார்ட் ஒன்றை பார்த்துவிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இவர்கள் திருமணம் கோவாவில் நடக்க இருக்கிறது. இதில் சிரஞ்சீவி குடும்பத்தினர் கலந்துகொள்ள இருக்கின்றனர். நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X