டிசம்பரில் திருமணம்.. வருங்கால கணவருடன் தீபாவளி கொண்டாடிய மெகா குடும்பத்து ஹீரோயின்!
ஐதராபாத்: தனது வருங்கால கணவருடன் பிரபல பெரிய குடும்பத்து நடிகை தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகின்றன.
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருபவர், நடிகை நிஹரிகா கோனிடேலா.
தமிழில், 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படம் மூலம் அறிமுகமானார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக் நடித்திருந்தனர்.

நாகபாவுவின் மகள்
நிஹரிகா, மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி, நாகபாவுவின் மகள். இதனால் இவரை பெரிய குடும்பத்து நடிகை என்று டோலிவுட்டில் கூறி வருகின்றனர். தயாரிப்பாளராகவும் இருக்கும் நிஹரிகா, 2016-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான, ஒக்க மனசு மூலம் சினிமாவில் அறிமுகமானவர். ஹேப்பி வெட்டிங், சூர்யகாந்தம், சைரா நரசிம்ம ரெட்டி ஆகிய படங்களில் நடித்துள்ளார். 'பிங்க் எலிபன்ட் பிக்சர்ஸ்' எனும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

பொறியாளர் சைதன்யா
இப்போது தமிழில் அசோக் செல்வன் ஜோடியாக புதிய படம் ஒன்றில் நடிக்க இருந்தார். ஸ்வாதினி இயக்கும் இந்தப் படத்தில் இருந்து, திருமணம் காரணமாக அவர் விலகினார். நிஹரிகாவுக்கும் ஐதராபாத்தைச் சேர்ந்த பொறியாளர் சைதன்யா என்பவருக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டிருந்தது.

நட்சத்திர ஓட்டல்
திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ஆகஸ்ட் மாதம் நடந்தது. கொரோனா பரவல் காரணமாக நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இதில் கலந்துகொண்டனர். நடிகர் சிரஞ்சீவி, ராம்சரண் தேஜா, அல்லு அர்ஜூன் உள்பட அவர்கள் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

ஓபராய் உடைவிலாஸ்
திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ஆகஸ்ட் மாதம் நடந்தது. கொரோனா பரவல் காரணமாக நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இதில் கலந்துகொண்டனர். நடிகர் சிரஞ்சீவி, ராம்சரண் தேஜா, அல்லு அர்ஜூன் உள்பட அவர்கள் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

வருங்கால கணவர்
இந்நிலையில் இந்த வருட தீபாவளியை, தனது வருங்கால கணவர், சைதன்யாவுடன் அவர் கொண்டாடி இருக்கிறார். நிஹரிகாவின் சகோதரரும் நடிகருமான வருண் தேஜும் இவர்களுடன் கலந்துகொண்டார். இந்த புகைப்படங்களை நிஹரிகா தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது வைரலானது.


Click it and Unblock the Notifications











