மெகா குடும்பத்து நடிகை திருமணம்.. தேதி குறிச்சாச்சு.. உதய்பூர் அரண்மனையில் பிரம்மாண்ட விழா!

By

ஐதராபாத்: பெரிய குடும்பத்து ஹீரோயின் திருமணம் உதய்பூர் அரண்மனையில் பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறது.

தமிழில், 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படம் மூலம் அறிமுகமானவர் நிஹரிகா.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக் நடித்திருந்தனர். நிஹரிகா, மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி, நாகபாவுவின் மகள்.

மெகா ஹீரோயின்

மெகா ஹீரோயின்

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் இவரை, மெகா குடும்பத்து நடிகை என்று கூறி வருகின்றனர். தயாரிப்பாளராகவும் இருக்கும் நிஹரிகா, 2016-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான, ஒக்க மனசு மூலம் நடிகையாக அறிமுகமானவர். ஹேப்பி வெட்டிங், சூர்யகாந்தம், சைரா நரசிம்ம ரெட்டி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

திருமணம் முடிவு

திருமணம் முடிவு

'பிங்க் எலிபன்ட் பிக்சர்ஸ்' எனும் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். தமிழில் அசோக் செல்வன் ஜோடியாக புதிய படம் ஒன்றில் நடிக்க இருந்தார். திருமணம் காரணமாக அந்தப் படத்தில் இருந்து விலகினார். நிஹரிகாவுக்கும் ஐதராபாத்தைச் சேர்ந்த சைதன்யா என்பவருக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டுள்ளது.

பங்கேற்ற குடும்பம்

பங்கேற்ற குடும்பம்

திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ஆகஸ்ட் மாதம் நடந்தது. கொரோனா பரவல் காரணமாக நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இதில்
கலந்துகொண்டனர். நடிகர் சிரஞ்சீவி, ராம்சரண் தேஜா, அல்லு அர்ஜூன் உட்பட குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

தேதியும் இடமும்

தேதியும் இடமும்

திருமணம் டிசம்பர் மாதம் நடக்கிறது. ஐதராபாத்தில் எளிமையாக நடக்கும் என்று முதலில் கூறப்பட்டது. பின்னர் கோவாவில் நடக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இப்போது இவர்கள் திருமணத் தேதியும் இடமும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

உடைவிலாஸ் பேலஸ்

உடைவிலாஸ் பேலஸ்

அதன்படி, டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி திருமணம் நடக்க இருக்கிறது. உதய்பூரில் உள்ள ஓபராய் உடைவிலாஸ் அரண்மனையில் இவர்கள் திருமணம் நடக்கிறது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். திருமண ஏற்பாடுகளை நிஹரிகாவின் சகோதரர் வருண் தேஜ் கவனித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X