twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    முன்னாள் முதல்வர் மகன்... லாக்டவுன் நேரத்திலும் திட்டமிட்டபடி நடந்தது, இளம் ஹீரோவின் திருமணம்!

    By
    |

    பெங்களூரு: நடிகரும் முன்னாள் முதல்வரின் மகனுமான இளம் ஹீரோவின் திருமணம் லாக்டவுன் நேரத்தில் அமைதியாக நடந்தது.

    Recommended Video

    Lock Down மீறி நடந்த திருமணம் | VIP சலுகை | Kumarasamy வீட்டு திருமணம்

    கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி, அனிதா தம்பதியின் மகன் நிகில் குமாரசாமி.

    முன்னாள் பிரதமர் ஹெச்.டி. தேவகவுடாவின் பேரனான இவர், ஜாக்குவார் என்ற கன்னட படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

    'அதை' போட்டிருந்தா இன்னும் நல்லாருக்கும்.. பாவாடை ஜாக்கெட்டுடன் செல்பி எடுத்த நடிகைக்கு அட்வைஸ்!'அதை' போட்டிருந்தா இன்னும் நல்லாருக்கும்.. பாவாடை ஜாக்கெட்டுடன் செல்பி எடுத்த நடிகைக்கு அட்வைஸ்!

    தமன்னா

    தமன்னா

    இந்தப் படம் கன்னடம் மற்றும் தெலுங்கில் உருவானது. இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் அப்பா, விஜயேந்திர பிரசாத் இந்தப் படத்துக்கு ஸ்கிரிப்ட் எழுதினார். மகாதேவ் இயக்கினார். தீப்தி சதி, ஜெகபதி பாபு, ரம்யா கிருஷ்ணன், சம்பத் ராஜ் உட்பட பலர் நடித்திருந்தனர். தமன்னா ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். அனிதா குமாரசாமி தயாரித்த இந்தப் படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்திருந்தார்.

    அபிமன்யூ

    அபிமன்யூ

    இதையடுத்து ஹர்ஷா இயக்கிய சீதாராமா கல்யாணா என்ற படத்தில் நடித்தார். இதில் சரத்குமார், ரச்சிதா ராம் உட்பட பலர் நடித்திருந்தனர். அடுத்து மகாபாரத கதையை கொண்ட குருஷேத்ரா படத்தில் அபிமன்யூ கேரக்டரில் நடித்திருந்தார். அடுத்து எஸ்.கிருஷ்ணா இயக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

    மாண்டியா தொகுதி

    மாண்டியா தொகுதி

    இதற்கிடையே, கடந்த பாராளுமன்ற தேர்தலில் கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் போட்டியிட்டார் நிகில். இவரை எதிர்த்து, மறைந்த நடிகர் அம்பரீஷின் மனைவி சுமலதா, பாஜக ஆதரவில் சுயேச்சையாகப் போட்டியிட்டார். பலத்த போட்டிக்கு இடையே நடந்த தேர்தலில் சுமலாதா அபார வெற்றி பெற்றார். நிகில் தோல்வி அடைந்தார்.

    காங்கிரஸ் தலைவர்

    காங்கிரஸ் தலைவர்

    இந்நிலையில், நிகிலுக்கு பெண் பார்த்து வந்தனர். கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணப்பாவின் பேத்தி ரேவதியை பேசி முடித்திருந்தனர். இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் பெங்களூரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டனர். திருமணம் இன்று நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

    கொரோனா வைரஸ்

    கொரோனா வைரஸ்

    பிரமாண்டமாக நடத்த தேவகவுடா குடும்பத்தினர் முடிவு செய்திருந்தனர். இதற்காக ராமநகர் பகுதியில் மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் நடந்து வந்தன. ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக திருமண ஏற்பாடுகள் திடீரென நிறுத்தப்பட்டன. ஊரடங்கு விதிக்கப்பட்டிருப்பதால் இந்த திருமணம் நடக்குமா? என்று கேள்வி எழுந்தது.

    பண்ணை வீட்டில்

    பண்ணை வீட்டில்

    ஆனால் திருமணம் திட்டமிட்டபடி நடக்கும் என்று தெரிவித்திருந்தனர். அதன்படி லாக்டவுன் நேரத்திலும், கர்நாடக மாநிலம் பிடாடி பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் இவர்கள் திருமணம் இன்று காலை எளிமையாக நடந்தது. இதில் ஹெச்.டி.தேவகவுடா, குமாரசாமி மற்றும் நெருங்கிய சொந்தங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இவர்கள் திருமண போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    ஆதரவாளர்கள்

    ஆதரவாளர்கள்

    இந்நிலையில், தனது ஆதரவாளர்கள் வீட்டில் இருந்தபடியே மணமக்களுக்கு ஆசிகளை வழங்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ஆதரவாளர்களை அழைக்க முடியாததற்காக மன்னிப்பு கேட்டுள்ளார். இந்த இக்கட்டான நேரத்தில் ஊரடங்கை ஆதரவாளர்கள் யாரும் மீற வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

    English summary
    Former Karnataka chief minister HD Kumaraswamy's son Nikhil Kumaraswamy Marries Revathi Amid Coronavirus Lockdown
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X