வெரைட்டியா முத்தம் கொடுக்க சொன்ன மாரி செல்வராஜ்.. கர்ணன் படத்திலேயே நிகிலா விமல் செய்த சம்பவம்!

சென்னை: குருவாயூர் அம்பலநடையில் படத்தின் வெற்றியால் செம ஹேப்பியாக இருக்கும் நிகிலா விமல் அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான வாழை படத்தில் நடித்துள்ள நிலையில், அடுத்த வாரம் வெளியாகவுள்ள அந்த படத்திற்கான புரமோஷன்களில் ஈடுபட்டு வருகிறார்.

அபர்ணதி போன்ற நடிகைகள் புரமோஷனுக்கு வரமாட்டேன் என்கிறார்கள் என தயாரிப்பாளர்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், மலையாள படங்களில் பிசியாக இருந்தாலும் நிகிலா விமல் தொடர்ந்து தமிழ் படத்துக்கும் புரமோஷன் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Nikhila Vimal Vaazhai Mari Selvaraj

வாழை படத்தில் நடித்துள்ள நிகிலா விமல் கர்ணன் படத்தில் நடிகை ரஜிஷா விஜயனுக்கும் டப்பிங் பேசியுள்ளேன் என்கிற சூப்பரான தகவலையும் வெளிப்படுத்தியுள்ளார்.

அழகிய லைலாவுக்கே படம் பிடிக்கலையா?: விபின் தாஸ் இயக்கத்தில் பிருத்விராஜ், பசில் ஜோசப், அனஸ்வரா ராஜன் உள்ளிட்ட பலர் நடித்த குருவாயூர் அம்பலநடையில் படம் முதலில் ப்ரிவ்யூ ஷோ பார்த்த போது நிகிலா விமலுக்கு சுத்தமாக பிடிக்கவே இல்லையாம். அதை சொன்ன நிலையில், படக்குழுவினர் தன்னை வசந்தம் (பூமர்) என கலாய்த்தனர். யங் ஜெனரேசனுக்கும் ஜென் ஸிக்கும் பிடிக்கும் என இயக்குநர் சொன்னார். அழகிய லைலா பாடலுக்கு எல்லாம் அந்தளவுக்கு ரெஸ்பான்ஸ் கிடைக்கும் என நினைத்துக் கூட பார்க்கவில்லை. படம் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில், நான் வசந்தம் தான் என டிக்ளரே செய்து விட்டனர் என ஓபனாக பேசினார்.

Nikhila Vimal Vaazhai Mari Selvaraj

மாரி செல்வராஜின் வாழை: வரும் ஆகஸ்ட் 23ம் தேதி தமிழ் சினிமாவில் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை மற்றும் வினோத்ராஜ் இயக்கிய கொட்டுக்காளி என இரு தரமான படங்கள் வெளியாக உள்ளன. மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை படத்தில் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அந்த படத்தை புரமோட் செய்யும் விதமாக யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து வருகிறார் நிகிலா விமல்.

ரஜிஷா விஜயனுக்கு டப்பிங்: தனுஷ் நடித்த கர்ணன் படத்தில் ரஜிஷா விஜயனுக்கு டப்பிங் பேசியதே நிகிலா விமல் தானாம். இதுவரை வெளியிடாத ரகசியத்தை சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார். அதிதி பாலனுக்கும் சில மலையாள படங்களில் டப்பிங் பேசியுள்ளேன் என்றும் எந்த படத்துக்கும் டப்பிங் பேச காசு எல்லாம் வாங்க மாட்டேன் என்றும் பேஷனாக அதை செய்து வருகிறேன் என்றார்.

Nikhila Vimal Vaazhai Mari Selvaraj

வெரைட்டியா முத்தம் எப்படி கொடுக்க முடியும்?: மாரி செல்வராஜின் கர்ணன் படத்தில் இடம்பெற்ற 'தட்டான் தட்டான்' பாடலில் தனுஷ் ரஜிஷா விஜயனுக்கு மாறி மாறி முத்தம் கொடுக்கும் காட்சிகள் இடம்பெற்று இருக்கும். அந்த முத்தத்துக்கு டப் செய்யும் போது வெரைட்டியா முத்தம் கொடுங்க என்றார். நான், அதெப்படி வெரைட்டியா முத்தம் கொடுப்பது என்று கேட்டேன். அதன் பின்னர் கையில் ஒவ்வொரு இடத்திலும் வைத்து முத்தம் கொடுத்த சத்தங்களை டப் செய்துக் கொண்டனர் என்றார்.

தொடர் வெற்றி: கிடாரி, வெற்றிவேல் படங்களில் நடித்து வந்த நிகிலா விமல் தமிழ் பெண் என்றே பலரும் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், மலையாள படங்களில் அவர் நடித்து வருவதை பார்த்து, அவர் கேரளாவை சேர்ந்தவர் என்பதே இப்போது தான் ரசிகர்களுக்கு தெரிய வந்துள்ளது. ஆனால், சரளமாக தமிழ் பேசும் அவர், ரஜிஷா விஜயனுக்கு டப்பிங்கே பேசியிருக்கிறார். தனது படங்களுக்கும் அவர் டப்பிங் பேசி வருகிறார். போர் தொழில், குருவாயூர் அம்பலநடையில் என வரிசையாக வெற்றிப் பெற்று வரும் நிகிலா விமல் வாழை படத்தின் மூலமும் வெற்றியை ருசிக்க காத்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X