twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    லாக்டவுனில்...மக்களுக்கு சேவை செய்ய, கால் சென்டரில் இணைந்த சசிகுமார் ஹீரோயின்! பாராட்டும் ஃபேன்ஸ்

    By
    |

    கண்ணூர்: லாக்டவுன் நேரத்தில் சேவை செய்வதற்காக, கார்த்தி பட நடிகை கால் சென்டரில் தன்னார்வலராக இணைந்துள்ளார்.

    Recommended Video

    Pandian stores Kathir Huge help | Raghava Lawrence emotional Tweet

    சத்யன் அந்திக்காடு இயக்கிய பாக்யதேவதா என்ற மலையாள படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நிகிலா விமல்.

    சசிகுமார் நடித்த வெற்றிவேல் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இதில் மியா, பிரபு, விஜி சந்திரசேகரன் உட்பட பலர் நடித்திருந்தனர்.

    அமலா பாலா.. ஜுவாலா கட்டாவா.. விஷ்ணு விஷால் விவாகரத்துக்கு யார் காரணம்? அமலா பாலா.. ஜுவாலா கட்டாவா.. விஷ்ணு விஷால் விவாகரத்துக்கு யார் காரணம்?

    கிடாரி, தம்பி

    கிடாரி, தம்பி

    நிகிலா விமலின் நடிப்பு, இந்தப் படத்தில் பாராட்டப்பட்டதை அடுத்து, பிரசாத் இயக்கிய கிடாரி படத்தில் ஹீரோயினாக நடித்தார். இதிலும் சசிகுமார் ஹீரோவாக நடித்தார். வேல ராம மூர்த்தி, வசுமித்ர உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் ஹிட்டானது. இதையடுத்து பஞ்சுமிட்டாய், கார்த்தியின் தம்பி படங்களில் நடித்துள்ளார் நிகிலா.

    கொரோனா வைரஸ்

    கொரோனா வைரஸ்

    இப்போது சிபி சத்யராஜ் நடித்துள்ள ரங்கா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

     ஊரடங்கு

    ஊரடங்கு

    நாள் சம்பளம் வாங்கும் தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. வரும் 14 ஆம் தேதி வரை விதிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் என்று கூறப் படுகிறது. இதற்கிடையே கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

    தன்னார்வலர்கள்

    தன்னார்வலர்கள்

    இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் விருப்பமுள்ளவர்கள் தன்னார்வலராக வந்து சேவை செய்யலாம் என்று கேரள அரசு அறிவித்திருந்தது. நிகிலா விமல் இதில் சேர விருப்பம் தெரிவித்திருந்தார். இதையடுத்து கண்ணூரில் உள்ள மாவட்ட பஞ்சாயத்து கால்சென்டரில் இணைந்துள்ளார். மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதை ஒருங்கிணைக்கும் கால்சென்டர் இது. இதையடுத்து ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

    English summary
    actress Nikhila Vimal found some time to serve the public by working at the district panchayat’s call centre in Kannur on Saturday
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X