Don't Miss!
- Technology நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் டா.. ChatGPT-க்கு செக் வச்ச Google.. இனி மொபைல் யூசர்கள் Gemini பக்கம்!
- News மயிலாடுதுறையில் ஆச்சரியம்.. அந்த "வைக்கோல் மூட்டை".. ஆஹா, வைத்தீஸ்வரன் கோயில் தையல் நாயகி.. பரவசம்
- Automobiles கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஆபாசத்துக்கும் நிர்வாண கலைக்கும் வித்தியாசம் தெரியல.. 8 வருட கணக்கை முடக்கியதால் நடிகை கோபம்!
மும்பை: ஆபாசத்துக்கும் நிர்வாண கலைக்கும் வித்தியாசம் தெரியாமல் தனது 8 வருட சமூக வலைதள கணக்கை முடக்கி விட்டார்கள் என பிரபல நடிகை கொந்தளித்துள்ளார்.
நிர்வாண கலை புகைப்படங்களுக்கு பிரபலமான நடிகை நிகிதா கோகலே, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகும் கவர்ச்சியும் நிறைந்த புகைப்படங்களை பதிவிட்டு இளைஞர்கள் மத்தியில் வைரலாகி வருகிறார்.
ஏப்ரலில் வருகிறார் கோடியில் ஒருவன்...தனஞ்செயன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இவரது கான்செப்ட் ஆர்ட் புகைப்படங்கள் சர்வதேச அளவில் இவருக்கான தனி ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறது.
நியூட் ஆர்ட்
நிர்வாணமாக பார்ன் வீடியோக்களை பதிவிடுவது ஆபாசம் என்றும், நிர்வாணமாக யோகா செய்வது, ஓவியத்துக்காகவும் போட்டோகிராஃபிக்காகவும் நிர்வாணமாக போஸ் கொடுப்பது ஆபாசம் அல்ல நியூட் ஆர்ட் என்று அதை பின் பற்றும் பிரபல மாடல்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், பாடி பெயின்ட்டிங்கும் ஆபாசத்தில் இடம்பெறாது என்பது அவர்களது தீர்க்கமான சிந்தனை.
ஆடையை கழட்டினாலே
ஆனால், ஆடையை கழட்டினாலே ஆபாசம் தான் என பல சமூக வலைதளங்கள் நிர்வாண புகைப்படங்களுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதித்து வருகின்றன. பாடி பெயின்ட் மாடல்கள், நியூடு ஆர்டிஸ்ட் உள்ளிட்டோர் சர்வ சாதாரணமாக, தங்களது முழு மேனியையும் காட்டி வந்த நிலையில், இனிமேல் அது போல காட்ட முடியாது என்பது நிகிதாவின் இந்த பதிவு மூலம் தெரிய வருகிறது.
இன்ஸ்டாகிராமில் நிர்வாணமாக
பிரபல மராத்தி நடிகையான நிகிதா கோகலே, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட நியூட் ஆர்ட் போட்டோக்களை பதிவிட்டு ஏகப்பட்ட ஃபாலோயர்களுடன் வைரலாகி வருகிறார். இந்நிலையில், இன்ஸ்டாகிராமிலும் தனது நிர்வாண கலை புகைப்படங்களை பகிர முடியாத சூழல் உருவாகி உள்ளது என அண்மையில் பதிவிட்டு இருந்தார்.
இலைமறை காய்மறையாக
இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட நடிகைகள், மாடல் அழகிகள் தங்கள் நிர்வாண புகைப்படங்களை கை வைத்து மறைத்தபடியும், ஏதாவது புராபர்ட்டி வைத்து அந்த இடத்தை மட்டும் மறைத்தபடியும், படு கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டும் ஏகப்பட்ட போஸ்களை இலை மறை காய் மறையாக பதிவிட்டு வருகின்றனர்.
8 வருட கணக்கு
மராத்தி நடிகையான நிகிதா கோகலேவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அது போன்ற புகைப்படங்களை இன்னமும் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், தனது 8 வருட சமூக வலைதள கணக்கு ஒன்று நியூட் ஆர்ட் போட்டோகிராபி இருந்ததற்காக முடக்கம் செய்யப்பட்டு இருக்கிறது என இன்ஸ்டாகிராமில் பொங்கி உள்ளார்.
இது ஆபாசம் இல்லை
கோயில்களில் இருக்கும் சிற்பங்களை போன்றது தான் தங்களுடைய நிர்வாண கலையும் எனக் கூறும் நிகிதா கோகலே, ஆபாசத்துக்கும் நிர்வாண கலைக்கும் பல பெரிய சமூக வலைதள நிறுவனங்களுக்கே வித்தியாசம் தெரியவில்லை என தனது பதிவில் வெளுத்து வாங்கி உள்ளார்.
சாப்பிடும் போட்டோக்கள்
சமூக வலைதளங்களில் கண்ட உணவை சாப்பிடும் போட்டோக்கள், பைத்தியக்காரத்தனம் பண்ணும் போட்டோக்கள், வீடியோக்கள் எல்லாம் பதிவிட அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால், கலைநயம் மிக்க புகைப்படங்களை பதிவிட அனுமதி இல்லை. நானும் இனிமேல் என் சமூக வலைதள பக்கங்களில் அது போன்ற போட்டோக்களையே போடப் போகிறேன் என்றும், தனது தனிப்பட்ட வெப்சைட்டில் தனது கலைப் படங்களை எந்தவொரு தடையுமின்றி தொடர்ந்து பதிவிடுவேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.