சட்டையை கழட்டி கையில் வைத்துக் கொண்டு டாப்லெஸ் போஸ் கொடுத்த பிரபல நடிகை.. சூடாகும் இணையம்!
மும்பை: மராத்தி நடிகையும் நியூட் ஆர்ட் மாடல் அழகியுமான நிகிதா கோகலே மீண்டும் இன்ஸ்டாகிராமில் தனது ஹாட் போட்டோக்களை பகிர்ந்துள்ளார்.
சமீபத்தில் தனது 8 வருட சமூக வலைதள கணக்கு ஒன்று நிர்வாண கலை புகைப்படங்களை பதிவிட்டதால் முடக்கப்பட்டதாக மிகவும் ஆதங்கப்பட்டு இவர் பதிவிட்ட போஸ்ட் வைரலானது.
இந்நிலையில், தற்போது மேலாடை அணியாமல் கையை வைத்து முன்னழகை மறைத்தபடி போஸ் கொடுத்து இணையத்தை சூடாக்கி வருகிறார்.

ஆடை அணியாமல்
சில மராத்தி படங்களில் நடித்துள்ள நிகிதா கோகலே நியூட் ஆர்ட் எனப்படும் நிர்வாண கலையில் தன்னை ஐக்கியப் படுத்திக் கொண்டார். கருப்பழகியான இவர், ஆடை அணியாமல் ஏகப்பட்ட நிர்வாண கலை போட்டோஷூட்களை நடத்தி சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்து வருகிறார். பெரும்பாலும் நெதர்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் தான் இவர் தனது போட்டோஷூட்டை நடத்தி வருகிறார்.

கருப்பழகி
கலராக இருந்தால் தான் மாடல் அழகிகளாக இருக்க வேண்டும் என்கிற பிம்பத்தை ஏகப்பட்ட பெண்கள் உடைத்து வருகின்றனர். இந்நிலையில், நிர்வாண கலையிலும் கருப்பான தனது உடலை எந்தளவுக்கு கலையம்ச படைப்பாக காட்ட முடியுமோ, அந்த அளவுக்கு காட்டி ரசிகர்களை வசீகரித்து வருகிறார் இவர்.

இப்படியும் போடுவேன்
இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் நிர்வாண புகைப்படங்களை பதிவிட தடை விதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், ஆடை அணியாமல் நிர்வாண கோலத்தில் காட்சி தந்த சில் அவுட் புகைப்படங்களை பதிவிட்டு, இப்படியும் இன்ஸ்டாகிராமில் போடுவேன் உங்களால் என்ன செய்ய முடியும் என்று சவால் விடுத்து வருகிறார்.

கைகளை வைத்து மறைத்து
பிரபல நிர்வாண புகைப்படக் கலைஞர் மதியாஸ் முல்லர் கேமராவில் படமாக்கப்பட்ட டாப்லெஸ் புகைப்படத்தை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார் நிகிதா கோகலே. மேலாடை ஏதும் அணியாமல் ஒரே ஒரு வெள்ளை சேலையை மட்டுமே இடுப்பில் உடுத்தி கைகளை வைத்து முன்னழகை மறைத்து சிலை போல காட்சி தரும் இவரது புகைப்படம் இணையத்தில் படு வேகமாக பரவி வருகின்றன.

சட்டையை கழட்டி
அதனை தொடர்ந்து கருப்பு நிற ஜெர்க்கின் போன்ற சட்டையை அணியாமல், கழட்டி கையில் வைத்துக் கொண்டு மார்பகங்களை மறைத்தபடி தற்போது இவர் கொடுத்துள்ள ஹாட்டான டாப்லெஸ் போஸ் புகைப்படமும் அதிக லைக்குகளை குவித்து தீயாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











