மகாபலிபுரத்துல இது எங்க இருக்கு? பிகினியில் அலைச்சறுக்கு விளையாடப் போன பிரபல நடிகை!
சென்னை: மகாபலிபுரத்தில், அலைச்சறுக்கு விளையாடப் போன பிரபல நடிகையின் பிகினி புகைப்படம் வைரலாகி வருகிறது.
பல்வேறு அழகிப் போட்டிகளில் வென்றுள்ள நடிகை நிகிதா சர்மா, டெல்லியைச் சேர்ந்தவர்.
இவர் பல இந்தி தொடர்களில் நடித்துள்ள இவர், கலர்ஸ் டிவியில் வெளியான மகாகாளி என்ற பக்தி தொடரில் லட்சுமிதேவியாக நடித்திருந்தார்.

வேற லெவல்
இதையடுத்து ஏராளமான ரசிகர்களை பெற்றிருந்தார். தோ தில் ஏக் ஜான், லைஃப் ஓகே, ஜோடியன் ரிஷ்டான் கே சர், ஹல்லா போல், லவ் பை சான்ஸ் உள்பட பல தொடர்களில் நடித்திருக்கும் இவருடைய தந்தை தொழிலதிபர். அதனால், கவலை இன்றி ஊர் சுற்றுவதில் இவர் வேற லெவல்.

நீண்ட விளக்கம்
இன்ஸ்டாவில் அடிக்கடி புகைப்படங்களைப் பதிவிடும் நிகிதா சர்மாவுக்கு ஏகப்பட்ட பாலோயர்ஸ். அவர்களுக்காகவே பிகினியில் இருந்து கிளாமர் ஸ்டில்கள் வரை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன் பிகினி பற்றி அவர் கொடுத்திருந்த நீண்ட விளக்கம் நெட்டிசன்களிடையே பரபரப்பானது.

மகாபலிபுரம்
இந்நிலையில், சமீபத்தில் சென்னை வந்திருந்த நடிகை நிகிதா, மகாபலிபுரம் சென்றிருந்தார். அங்கிருந்து அவர் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டிருந்தார். இந்தியாவில் மிகவும் உயர்ந்த, ரசனையான கலாசாரம் இருக்கிறது. அதை சமீபத்தில் மகாபலிபுரம் சென்றபோது கண்டேன் என்று கூறிய நிகிதா, ஐந்து ரதம் பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.

ஹாட் பிகினி
அங்கு எடுத்த புகைப்படங்களையும் அவர் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் அவர் இப்போது வெளியிட்டுள்ள ஹாட் பிகினி புகைப்படங்கள் வேகமாக பரவி வருகிறது. இதையும் மகாபலிபுரம் ரிசார்ட் ஒன்றில் இருந்துதான் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்களில் அவர் செம கிளாமராக இருக்கிறார்.

வெட்கப்படாம போடுங்க
'உங்க ஸ்மைல் பவர்புல்லா இருக்கு. இதே போல இன்னும் சில போட்டோஸ் வெட்கப்படாம போடுங்க' என்று சிலர் கூறியுள்ளனர். சிலர் வீடியோ கேட்டுள்ளனர். பலர் ஸ்டன்னிங் லுக், சான்சே இல்லை என்றும் அவர் அழகை புகழ்ந்தும் பதிவிட்டுள்ளனர்.

அலைச்சறுக்கு அனுபவம்
மற்றொரு போட்டோவில் கடலுக்கு அலைச்சறுக்கு விளையாடச் செல்வது போல போஸ் கொடுத்துள்ளார். முதன்முறையாக அலைச்சறுக்கு அனுபவம் அலாதியாக இருந்தது என்று கூறியுள்ளார். சிலர், மகாபலிபுரத்துல இது எங்க இருக்கு? என்று கேட்டுள்ளனர். நிகிதாவின் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











