எது சிலைன்னு தெரியலையே.. மகாபலிபுரத்துக்குத் திடீர் விசிட் அடித்த நடிகை.. அப்படி வியப்பு!
சென்னை: மகாபலிபுரத்துக்கு சமீபத்தில் சென்றுள்ள பிரபல நடிகை அங்கிருந்து எடுத்துள்ள புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
பிரபல சீரியல் நடிகை நிகிதா சர்மா. இந்தி சீரியல்கள் பலவற்றில் இவரை பார்த்திருக்க முடியும்.
கலர்ஸ் டிவியில் வெளியான மகாகாளி என்ற பக்தி தொடரில் லட்சுமிதேவியாக பக்தி மணம் கமழ நடித்திருக்கிறார், நிகிதா.

அழகிப் போட்டி
பல்வேறு அழகிப் போட்டிகளில் வென்றுள்ள நிகிதா, டெல்லியைச் சேர்ந்தவர். இவர் தந்தை தொழிலதிபர். இவர் சொந்தமாக சில பேக்கரிகளை நடத்தி வருகிறார் டெல்லியில். தோ தில் ஏக் ஜான், லைஃப் ஓகே, ஜோடியன் ரிஷ்டான் கே சர், ஹல்லா போல், லவ் பை சான்ஸ் உட்பட பல தொடர்களில் நடித்திருக்கிறார்.

ஏகப்பட்ட ஃபாலோயர்ஸ்
மற்ற நடிகைகளை போல இன்ஸ்டாவில் அடிக்கடி புகைப்படங்களைப் பதிவிடும் நிகிதா சர்மாவுக்கு ஏகப்பட்ட ஃபாலோயர்ஸ். அவர்களுக்காகவே பிகினியில் இருந்து கிளாமர் ஸ்டில்கள் வரை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன் பிகினி பற்றி அவர் கொடுத்திருந்த நீண்ட விளக்கம் வைரலானது.

ஸ்லிம்மா இருக்கணும்
'உனக்கு பிகினிக்கான உடலே இல்லை. அதுக்கு ஸ்லிம்மா இருக்கணும்' என்றார்கள். என் உடல் பற்றி அவர்கள் பேசியது, அவமானமாக இருந்தது. சில வருடங்களுக்கு பிறகு என் உடல் பற்றிய தாழ்வு மனப்பான்மையை எதிர்த்து போராடியதில் ஒரு விஷயத்தைக் கற்றுக் கொண்டேன். அது, என்னுடல் எனக்கானது, அதில் மற்றவர்கள் சொல்ல என்ன இருக்கிறது எனப் புரிந்துகொண்டேன் என்று கூறியிருந்தார்.

மகாபலிபுரம்
இந்நிலையில், சமீபத்தில் சென்னை வந்திருந்த நடிகை நிகிதா, மகாபலிபுரம் சென்றிருக்கிறார். அங்கிருந்து அவர் எடுத்துள்ள புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்தியாவில் மிகவும் உயர்ந்த, ரசனையான கலாசாரம் இருக்கிறது. அதை சமீபத்தில் மகாபலிபுரம் சென்றபோது கண்டேன் என்று கூறியுள்ள நிகிதா, ஐந்து ரதம் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

அழகான சிலை
இதையடுத்து கருத்து தெரிவித்துள்ள ரசிகர்கள், அது அழகான இடம், அங்கு பார்க்க நிறைய இருக்கிறது. அனைத்தையும் பாருங்கள் என்று கூறியுள்ளனர். ஒருவர், அது ஒரே பாறையில் செய்யப்பட்டவை என்று கூறியுள்ளார். நீங்களே அழகான சிலை மாதிரிதான் இருக்கீங்க. சிலை அருகில் நிற்கும்போது எது சிலைன்னு தெரியலை என்று புகழ்ந்து தள்ளியுள்ளனர்.


Click it and Unblock the Notifications