'நிக்கி கல்ராணியை பார்த்த பிறகு தான் என் மனதை மாற்றிக்கொண்டேன்'... மனம் திறந்த ஜீவா!

நிக்கி கல்ராணியை பார்த்து தனது மனதை மாற்றிக் கொண்டதாக நடிகர் ஜீவா தெரிவித்துள்ளார்.

Recommended Video

இரும்புத்திரைக்கு முன்னாடியே எங்க படம் ரெடி- நடிகர் ஜீவா- வீடியோ

சென்னை: நடிகை நிக்கி கல்ராணி தனது எண்ணத்தை மாற்றியதாக நடிகர் ஜீவா தெரிவித்துள்ளார்.

குளோபல் இன்போடெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், ஜீவா, நிக்கி கல்ராணி, அணைகா , ஆர்ஜே பாலாஜி , பத்ம சூர்யா , ராஜேந்திர பிரசாத் , சுகாசினி , மனோ பாலா , மீரா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 'கீ'. இப்படத்தை காலீஸ் இயக்கியுள்ளார். விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கீ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ஜீவா, நிக்கி கல்ராணியை பார்த்த பிறகு தான், வருடத்திற்கு ஒரு படம் நடிக்க வேண்டும் என்ற தனது முடிவை மாற்றிக்கொண்டதாகக் கூறினார்.

மனதை மாற்றிய நிக்கி

மனதை மாற்றிய நிக்கி

இதுகுறித்து அவர் பேசியதாவது, "வருடத்திற்கு ஒரு படம் நடித்துக் கொண்டிருந்தேன். ஆனால் நிக்கி கல்ராணியை பார்த்து தான் பல படங்கள் பண்ண வேண்டும் என எண்ணம் மனதில் தோன்றியது. நிக்கி கல்ராணியுடன் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

வில்லன் கோவிந்த்

வில்லன் கோவிந்த்

படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தை மலையாள நடிகர் கோவிந்த் பத்மசூரியா நடித்துள்ளார். மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். படத்திற்கு விஷால் அருமையாக இசையமைத்துள்ளார்.

அருமையான கதை

அருமையான கதை

அருமையான கதையைக் கொண்டது இத்திரைப்படம். தற்போதைய டெக்னாலஜியில் வளர்ந்து வரும் பிரச்சனையை கூறும் படமாக அமைந்துள்ளது. சரியான தருணத்தில் கூப்பிட்ட நேரத்தில் வந்து ஒளிபதிவினை மேற்கொண்ட அபிநந்தனுக்கு என் நன்றிகள். சிறப்பான பணியைச் செய்துள்ளார்.

இளம் இயக்குனர்கள்

இளம் இயக்குனர்கள்

காலீஸ் சிறந்த இயக்குனர். இதுபோன்ற நிறைய இளைய புதுமுக இயக்குனர்கள் நம் தமிழ் சினிமாவிற்கு தேவை. இளைய இயக்குனர்கள் வந்தால்தான் புதிய எண்ணங்கள் தோன்றும். புதிய எண்ணங்கள் இருந்ததால் தான் பல பரிமாணங்களில் திரைப்படங்களை தர முடியும்.

பிரமாண்ட காட்சிகள்

பிரமாண்ட காட்சிகள்

இந்த படத்தில் நடித்த ஆர்ஜே பாலாஜி, அணைகா அருமையாக நடித்துள்ளனர். படத்தின் காட்சிகள் மிக பிரமாண்டமாக வந்துள்ளது. படத்தொகுப்பாளர் நாகூரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இறுதியாக இந்த படம் ஏப்ரல் 12ம் தேதி ரிலீஸ் ஆகிறது .உங்கள் அன்பாலும் ஆதரவாலும் படம் வெற்றி பெறும் என நம்புகிறேன்", இவ்வாறு அவர் கூறினார்.

More from Filmibeat

Read more about: jiiva kee ஜீவா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X