ரூ50 லட்சம் மோசடி… ஓட்டல் உரிமையாளர் மீது நிக்கி கல்ராணி புகார் !
சென்னை : நடிகை நிக்கி கல்ராணி ஓட்டல் உரிமையாளர் ஒருவர் தன்னிடம் ரூ50 லட்சம் மோசடி செய்துள்ளதாக புகார் கூறியுள்ளார்.
ஜிவி பிரகாஷ் நடித்த டார்லிங் திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் நிக்கி கல்ராணி.
இவர் தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.

போதைப்பொருள் வழக்கில்
நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி. இவர் கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். சமீபத்தில் இவர் போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு இருந்தார். இந்த விவகாரம் கன்னட திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

புகார் மனு
நிக்கி கல்ராணியின் குடும்பத்தினர் பெங்களூருவில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் பெங்களூரு அம்ருதஹள்ளி போலீஸ் நிலையத்தில் நடிகை நிக்கி கல்ராணி ஓட்டல் உரிமையாளர் ஒருவர் மீது ஒரு புகார் அளித்துள்ளார்.

ரூ50லட்சத்தி
2016ம் ஆண்டு கோரமங்களா பகுதியில் ஓட்டலில் ரூ.50 லட்சம் முதலீடு செய்திருந்தேன். இதற்காக மாதம் ஒரு லட்சம் கொடுப்பதாக அந்த ஓட்டலில் உரிமையாளர் நிகில் கூறியிருந்தார். ஆனால் இதுவரை நிகில் எந்த பணத்தையும் தரவில்லை. மாறாக என்னிடம் வாங்கிய ரூ.50 லட்சத்தையும் திரும்ப கொடுக்கவில்லை. இதுபற்றி பலமுறை நிகிலிடம் கேட்டபோது அவர் சரியாக பதில் அளிக்கவில்லை.
Recommended Video

சட்டப்படி நடவடிக்கை
என்னிடம் வாங்கிய ரூ.50 லட்சத்தை திரும்ப கொடுக்காமல் நிகில் மோசடி செய்துள்ளார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை நிக்கி கல்ராணி கூறியுள்ளார். அந்த புகாரின் பேரில் அம்ருதஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











