அதுக்குள்ள இவ்ளோ வருஷமாயிடுச்சா? சினிமாவில் 7 வருஷம்.. ரசிகர்களுக்கு நன்றி சொன்ன பிரபல நடிகை!

By

சென்னை: சினிமாவுக்கு வந்து ஏழு ஆண்டுகள் ஆனதை ஒட்டி, பிரபல நடிகை ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

நடிகை நிக்கி கல்ராணி, கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்தவர். தமிழில், ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக டார்லிங் படம் மூலம் அறிமுகமானார்.

இந்த ஹாரர், காமெடி படம் கவனிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்தன.

கடவுள் இருக்கான்

கடவுள் இருக்கான்

பிறகு, யாகாவாராயினும் நாகாக்க, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மொட்ட சிவா கெட்ட சிவா, கடவுள் இருக்கான் குமாரு, கலகலப்பு 2, சார்லி சாப்ளின் 2 உட்பட சில படங்களில் நடித்தார். மலையாளத்தில் 1983 என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் இவர்.

சஞ்சனா கல்ராணி

சஞ்சனா கல்ராணி

தொடர்ந்து மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இவரது சகோதரி சஞ்சனா கல்ராணி கன்னடத்தில் நடித்து வருகிறார். தமிழில் அறிமுகமாக இருக்கிறார். போதைப் பொருள் வழக்கில் கைதான சஞ்சனா, சிறையில் இருந்துவிட்டு, கடந்த மாதம்தான் ஜாமீனில் வெளியே வந்தார்.

ரசிகர்களுக்கு நன்றி

ரசிகர்களுக்கு நன்றி

நடிகை நிக்கி கல்ராணியும் நடிகர் 'மிருகம்' ஆதியும் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிக்கி, சிகிச்சைக்குப் பின் அதில் இருந்து மீண்டார். இந்நிலையில், இவர் சினிமாவுக்கு வந்து ஏழு வருடம் ஆனதை ஒட்டி, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அற்புதமான

அற்புதமான

இதுபற்றி அவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் கூறியிருக்கிறார். அதில் தனது சினிமா கேரக்டர்களின் புகைப்படங்களை பதிவிட்டுள்ள அவர், சினிமா துறைக்கு வந்து அற்புதமான ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன. பல்வேறு பாத்திரங்கள், சிரிப்பு, நாடகம் இன்னும் பல்வேறு கேரக்டர்களை ஏற்றுள்ளேன்.

ஆதரவும் அன்பும்

ஆதரவும் அன்பும்

உங்கள் ஒவ்வொருவருக்கும் கடமைப்பட்டிருக்கிறேன். உங்கள் ஆதரவும் அன்பும் இல்லை என்றால் நான் இங்கு இருக்க வாய்ப்பில்லை. நான் இப்போது இருக்கும் இடத்தை தந்த உங்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார். இதையடுத்து நெட்டிசன்ஸ் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

மொட்ட சிவா

மொட்ட சிவா

ஒருவர், அதுக்குள்ள ஏழு வருஷம் ஆயிடுச்சா? என்று ஆச்சரியமாக கேட்டுள்ளார். இன்னொரு கலாய் ரசிகர், நீங்க பண்ணுனதிலேயே, மொட்ட சிவா கெட்ட சிவாதான் பெரிய சம்பவம் என்று தெரிவித்துள்ளார். பலர், இன்னும் நல்ல கேரக்டர்களில் நடிங்க என்று அட்வைஸ் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X