எனக்குள்ள இருக்கற குழந்தைக்கு வயசே ஆகாது.. நிக்கி கல்ராணி க்யூட் விளையாட்டு!
சென்னை : தென்னிந்திய மொழிகளில் சிறப்பான பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம்வந்தவர் நிக்கி கல்ராணி.
நடிகர் ஆதியை காதலித்து வந்த இவர் கடந்த மே மாதத்தில் திருமணம் செய்துக் கொண்டார். தெலுங்கு முறைப்படி இவர்களது திருமணம் நடைபெற்றது.
இதனிடையே தற்போது படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட நிக்கி, டிவி ஷோக்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

நடிகை நிக்கி கல்ராணி
நடிகை நிக்கி கல்ராணி தென்னிந்திய மொழிப் படங்களில் சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். தமிழில் டார்லிங் படத்தில் ஜிவி பிரகாஷுடன் இணைந்து நடித்திருந்தார் நிக்கி கல்ராணி. இந்தப் படம் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. தொடர்ந்து மரகதநாணயம் உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்தார். இந்தப் படங்கள் இவருக்கு சிறப்பான நடிகைக்கான அந்தஸ்தை கொடுத்தது.

ஆதியுடன் இணைந்து நடித்த நிக்கி
இந்தப் படத்தில் நடிகர் ஆதியுடன் இணைந்து நடித்தார் நிக்கி கல்ராணி. இந்தப் படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இதுகுறித்த தகவல் வெளியான நிலையில், முதலில் இருவரும் இந்த தகவலை உறுதிப்படுத்தவில்லை. தொடர்ந்து இவர்களது நிச்சயதார்த்தம் இந்த ஆண்டின் துவக்கத்தில் நடைபெற்றது. தொடர்ந்து கடந்த மே மாதத்தில் இருவரின் திருமணமும் தெலுங்கு முறைப்படி நடைபெற்றது.

ஆதி -நிக்கி கல்ராணி திருமணம்
இவர்களின் திருமணத்தில் திரையுலக நட்சத்திரங்கள், சின்னத்திரை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர். ரசிகர்கள், உறவினர்கள், நண்பர்கள் சூழ இவர்களது திருமணம் நடைபெற்றது. தொடர்ந்து இருவரும் தங்களது ஹனிமூனையும் முடித்துக் கொண்டு தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்
ஆதி திரைப்படங்களில் மீண்டும் கவனம் செலுத்திவரும் சூழலில், தொடர்ந்து நடிப்பதை குறைத்துக் கொண்டுள்ள நிக்கி கல்ராணி, முன்னணி சேனலின் கேம் ஷோ ஒன்றில் நடுவராக செயல்பட்டார். தொடர்ந்து இவர் கர்ப்பமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இதையும் நகைச்சுவையுடன் எதிர்கொண்டார் நிக்கி. இன்ஸ்டாகிராமிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படும் நிக்கி கல்ராணி தற்போது புதிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

நீர்க்குமிழியுடன் விளையாட்டு
அந்த வீடியோவில் சிறுமி ஒருவர் நீர்க்குமிழியுடன் விளையாடிக் கொண்டிருக்க அவரது சந்தோஷத்தில் பங்கேற்று குழந்தையாக மாறியுள்ளார் நிக்கி கல்ராணி. தொடர்ந்து தனக்குள்ளே இருக்கும் குழந்தைக்கு எப்போதும் வயதாகாது என்றும் தெரிவித்துள்ளார். இவரது இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் அதிகமான லைக்ஸ்களை குவித்து வருகின்றனர். தொடர்ந்து அடுத்தடுத்த வீடியோக்களை பகிர்ந்து வருகிறார் நிக்கி கல்ராணி.


Click it and Unblock the Notifications











