பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 லட்சத்தை தூக்கிட்டு ஓடினாரா காஞ்சனா நடிகை? பரபரக்கும் ரசிகர்கள்!

மும்பை: நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கும் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 லட்சம் ரூபாய் பணப்பெட்டியுடன் நடிகை நிக்கி டம்போலி வெளியேறி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இயக்குநர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான காஞ்சனா 3 படத்தில் ஓவியா, வேதிகாவை தொடர்ந்து இன்னொரு அத்தை பெண்ணாக நடித்து கிளுகிளுப்பூட்டியவர் நடிகை நிக்கி டம்போலி.

பிக் பாஸ் 14வது சீசனில் கவர்ச்சி போட்டியாளராக இருந்த இவர், தற்போது பணப்பெட்டியுடன் எஸ்கேப் ஆகி விட்டார் என்கிற தகவல் பரபரப்பை கிளப்பி உள்ளது.

14வது சீசன்

14வது சீசன்

தமிழ்நாட்டில் 4வது சீசன் பிக் பாஸ் தான் முடிந்துள்ளது. இந்தியாவுக்கே பிக் பாஸ் நிகழ்ச்சியை அறிமுகம் செய்த இந்தி பிக் பாஸ் 14வது சீசனின் நிறைவு பகுதியை எட்டியுள்ளது. வழக்கம் போல இந்த சீசனையும் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

தியேட்டர், மால் எல்லாம்

தியேட்டர், மால் எல்லாம்

கனவு வீடாகவே பிக் பாஸ் வீடு இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் புது விதமான விசயங்களை அந்த வீட்டில் செய்து வருகின்றனர். இந்தி பிக் பாஸில் இந்த சீசனுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வீட்டில் மால், தியேட்டர், ஸ்பா உள்ளிட்ட ஏகப்பட்ட லக்சரி இடங்கள் உருவாக்கப்பட்டு இருந்தன.

கிளாமருக்கு பஞ்சமில்லை

கிளாமருக்கு பஞ்சமில்லை

தமிழ் பிக் பாஸ் போலலாம் போரிங்காகவே இந்தி பிக் பாஸ் போகாதாம். அங்கே கிளாமருக்கு பஞ்சமே இல்லை. ஏகப்பட்ட காதல் கதைகளையும் தாண்டி கவர்ச்சி கதைகள் இந்த சீசனில் அரங்கேறின. பத்திரிகையாளர் சந்திப்பை எல்லாம் கூட பிக் பாஸ் வீட்டிலேயே சமீபத்தில் வைத்து பரபரப்பை கிளப்பினர்.

கிராண்ட் ஃபினாலே வாரம்

கிராண்ட் ஃபினாலே வாரம்

இந்தி பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே வாரத்தை நெருங்கி விட்டது. இந்நிலையில், வாரத்தின் மத்தியில் வீட்டில் இருந்து வெளியேறப் போவது யார் என்கிற தகவல் இங்கே கசிவது போலவே அங்கேயும் கசிந்து வைரலாகி வருகிறது. நடிகை நிக்கி டம்போலி தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து கிராண்ட் ஃபினாலேவுக்கு முன்பாக வெளியேறி உள்ளாராம்.

காஞ்சனா நடிகை

காஞ்சனா நடிகை

இயக்குநர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வெளியான காஞ்சனா 3 படத்தில் ஓவியா, வேதிகாவை தொடர்ந்து இன்னொரு அத்தை பெண்ணாக நடித்து கிளுகிளுப்பூட்டிய நடிகை நிக்கி டம்போலி இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். தற்போது அவர் தான் வீட்டில் இருந்து பணப்பெட்டியுடன் வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது.

6 லட்சத்துடன் எஸ்கேப்

6 லட்சத்துடன் எஸ்கேப்

சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ் பிக் பாஸ் சீசன் 4ல் எப்படி கேபிரியல்லா 5 லட்சம் ரூபாய் பணப்பெட்டியுடன் ரியோவுக்கு அல்வா கொடுத்து நடையை கட்டினாரோ அதே போலத்தான் இந்தி பிக் பாஸ் சீசன் 14ல் பாலிவுட் நடிகை நிக்கி டம்போலியும் வெளியேறி உள்ளதாக கூறுகின்றனர். அதிகாரப்பூர்வ தகவல் இன்றைய எபிசோடில் தான் தெரியவரும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X