அன்கண்டிஷனல் லவ்வாம்ல.. ஐயையோ, பப்பியை வைக்கிற இடமா அது? அலறும் ஃபேன்ஸ், காஞ்சனா நடிகை கப்சிப்!
சென்னை: பிரபல நடிகை, தனது செல்ல பப்பியை அணைத்தபடி இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
Recommended Video
கொரோனா வைரஸ், உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையும் உச்சத்தை எட்டி வருகிறது.

எண்ணிக்கை அதிகரிக்கும்
இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 16,95,988 ஆக உயர்ந்துள்ளது. அதே போல, கடந்த 24 மணி நேரத்தில், 764 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 36,511 ஆக உள்ளது. இத்தகவலை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தெரிகிறது.

நிக்கி தம்போலி
கொரோனாவை கட்டுப்படுத்த லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், நடிகர், நடிகைகள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கின்றனர். அவர்கள் வீட்டில் இருந்தபடி, தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை தங்கள் சமூக வலைத்தளப்பக்கங்களில் வீடியோ மூலம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சோசியல் மீடியாவில் ஆக்டீவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் நடிகை நிக்கி தம்போலி.

இந்தியில் அறிமுகம்
இவர், காஞ்சனா 3 படத்தில் நடித்திருந்தார். ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் ஓவியா, வேதிகா, கோவை சரளா, ஶ்ரீமன், தேவதர்ஷினி நடித்த படம், காஞ்சனா 3. இதில், இன்னொரு ஹீரோயினாக நிக்கி நடித்திருந்தார். இந்தப் படத்துக்குப் பின் தெலுங்கில் சில படங்களில் நடித்தார். கன்னடத்திலும் நடித்து வருகிறார். இப்போது ராஜேஷ் பஜாஜ் இயக்கும் இந்தி படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்

மால்டிஸ் நாய்க்குட்டி
இவர் அடிக்கடி, இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அவர் இப்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை அதிகமான நெட்டிசன்கள் லைக் செய்துள்ளனர். சிலர் தங்கள் ஜாலி கேலி கமென்ட்களை ஏடாகூடமாகத் தெரிவித்துள்ளனர். அவர் தனது செல்ல மால்டிஸ் வகை நாய்க்குட்டியை நெஞ்சோடு அணைத்தபடி சில புகைப்பங்களை வெளியிட்டுள்ளார்.

அன்கண்டிசனல் லவ்
சிலர், ஐயையோ பப்பி பாவம். அப்படி அணைக்காதீங்க? என்று அலறியுள்ளனர். தங்களுக்குத் தேவையானவர்களைக் கண்டுபிடிக்கும் வழி நாய்களுக்குத் தெரிந்திருக்கிறது என்று கேப்ஷன் கொடுத்துள்ள நிக்கி, அன் கண்டிசனல் லவ் என்ற ஹேஷ்டேக்கை குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து ஒரு நெட்டிசன், தெரு நாய்கள் கூட அப்படித்தான். ஆனா அதை யாரும் கண்டுக்கிறது இல்லையே? என்று கூறியிருக்கிறார்.

யாருமே இல்லை
சிலர், ஏன் மேக்கப் போடலை? என்றும் மேக்கப் இல்லை என்றாலும் நீங்கள் அழகுதான் என்றும் கூறியுள்ளனர். பலர் அமேஸிங், சூப்பர், உங்க அழகுக்கு நிகர் யாருமே இல்லை என்று வழக்கம் போல வர்ணித்துள்ளனர். இந்த நாய்க்கு என்ன சாப்பாடு கொடுக்கறீங்க என்று சிலர் கேட்டுள்ளனர். நடிகை நிக்கி தம்போலியின் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











