நம்ப முடியாத அழகு.. கண்ணைத் திருப்ப முடியலையே.. பிரபல நடிகையின் போட்டோஸ் கண்டு வியக்கும் ஃபேன்ஸ்!
சென்னை: பிரபல நடிகை வெளியிட்டுள்ள புகைப்படத்தை ரசிகர்கள் கண்டபடி வர்ணித்து வருகின்றனர்.
ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் ஓவியா, வேதிகா, கோவை சரளா, ஶ்ரீமன், தேவதர்ஷினி நடித்த படம், காஞ்சனா 3.
இதில், இன்னொரு ஹீரோயினாக நடித்திருந்தவர் நிக்கி தம்போலி. இந்தப் படத்துக்குப் பின் தெலுங்கு சில படங்களில் நடித்தார்.

தென்னிந்திய சினிமா
மும்பை இறக்குமதி நடிகையான இவர், கன்னடத்திலும் நடித்து வருகிறார். இப்போது இந்தியில் அறிமுகமாகிறார். ராஜேஷ் பஜாஜ் இயக்கும் இந்தி படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்தப் படத்தில் ஹீரோவாக நடிப்பவர், நமஷி சக்கரவர்த்தி. இவர், பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தியின் மகன்.

பாடிலாங்குவேஜ்
'இது ஜாலியான பொழுதுபோக்கு படம். வெளிநாட்டில் வசிக்கும் இந்தியராக நடிக்கிறேன். காதல், காமெடி, ஆக்ஷன் எல்லாமே படத்தில் இருக்கிறது. எனது பாடிலாங்குவேஜ், பேச்சு வழக்கு உள்ளிட்ட ஸ்டைல்களுக்காக வொர்க் ஷாப் நடக்க இருக்கிறது. அதில் விரைவில் கலந்து கொள்ள இருக்கிறேன்' என்று கூறியிருந்தார்.

இன்ஸ்டாகிராம்
ஆனால், லாக்டவுனால் வொர்க் ஷாப் மற்றும் படப்பிடிப்பு தடைபட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். அவர் இப்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை ரசிகர்கள் அதிகமாக லைக் செய்துள்ளனர். சிலர் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

வர்ணிக்க வார்த்தை
ஒருவர், இது நம்ப முடியாத அழகு, கண்ணைத் திருப்ப முடியவில்லை என்று ஓவராக வழிந்துள்ளார். மற்றும் சிலர் அவர் அழகை கண்டபடி புகழ்ந்துள்ளனர். ஒருவர், நான் தென்னிந்திய படங்களை பார்த்ததில்லை. உங்களுக்காக பார்க்கப் போகிறேன் என்று தெரிவித்துள்ளார். இன்னொருவர், உங்களை வர்ணிக்க வார்த்தையில்லை, இந்த உலகில் நீங்கள்தான் விலைமதிப்பற்ற அழகு என்று கூறியுள்ளார்.

சில நேரங்களில்
அழகுக்கு நீங்கதான் உண்மையான உதாரணம்.. அப்படி சிரிக்காதீங்க என்று ஒருவர் கூறியுள்ளார். வாழ்க்கை, சில நேரங்களில் இருட்டுக்குள் இழுத்துச் செல்லும். ஆனால், நீங்கள் சூரிய ஒளியை கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று தத்துவம் சொல்லி இருக்கிறார் ஒருவர். இன்னொரு ரசிகை, நானும் உங்களைப் போலவே ஸ்லிம்மா இருக்கணும்னு ஆசைப்படறேன் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











