»   »  நிலா போட்ட கேஸ்: படத்துக்குத் தடை!

நிலா போட்ட கேஸ்: படத்துக்குத் தடை!

Subscribe to Oneindia Tamil

தனது சம்பளப் பாக்கியைக் கொடுக்காமல் படத்தைத் திரையிடக் கூடாது, விளம்பரம்செய்யக் கூடாது என்று கூறி ஹைதராபாத் நீதிமன்றத்தில் நடிகை நிலா தொடர்ந்தவழக்கை விசாரித்த நீதிபதி, நிலா நடித்த தெலுங்குப் படமான சத்யம் சிவம் சுந்தரம்படத்தைத் திரையிட இடைக்கால தடை விதித்தார்.

குற்றாலத்தில் குளிக்க அழுக்குத் தண்ணீரைக் கொடுத்தார்கள் என்று ஜாம்பவான்படத்தின் பாதியில் விலகி ஹைதராபாத்துக்கு நிலா ஓடிப் போனாரேநினைவிருக்கிறதா?. அப்போது அங்கு அவர் நடிக்க ஒத்துக் கொண்டபடம்தான் சத்யம் சிவம் சுந்தரம்.

இப்படத்தில் நடிப்பதற்காகத்தான் நிலா ஓடிப் போனார் என்று அப்போது கூறப்பட்டது.சீனிவாசராஜு என்பவர் தயாரிப்பில் உருவான இப்படத்தில் நடிப்பதற்காக ரூ.18லட்சம் சம்பளம் பேசப்பட்டு, அட்வான்ஸாக ரூ. 3 லட்சம் தரப்பட்டது.

மொத்தம் 2 மாத கால்ஷீட் கொடுத்திருந்தார் நிலா. ஆனால் படப்பிடிப்புதாமதமானதால் 75 நாட்களுக்கு ஷூட்டிங் நீண்டு விட்டது. படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த சமயத்தில், நிலாவுக்கு ரூ. 9 லட்சம் சம்பளத்திற்கான காசோலையைக்கொடுத்தார் சீனிவாசராஜு. ஆனால் ராஜு கணக்கில் பணம் இல்லாததால் காசோலைதிரும்பி விட்டது.

இந்த நிலையில், சத்யம் சிவம் சுந்தரம் படத்திற்கான விளம்பரங்களை வெளியிடஆரம்பித்தார் ராஜு. இதையடுத்து ராஜுவை அணுகிய நிலா, எனது சம்பளப்பாக்கியைக் கொடுக்காமல் விளம்பரம் வெளியிடக் கூடாது, படத்தைத்திரையிடக் கூடாது என்றார்.

ஆனால் ராஜு அதைக் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து ஹைதராபாத்நீதிமன்றதிதல் ராஜு மீது காசோலை மோசடி வழக்கை தொடர்ந்தார் நிலா. அந்தமனுவில் தனது சம்பளப் பாக்கி ரூ. 12 லட்சத்தை செட்டில் செய்த பின்னரேபடத்தை வெளியிட ராஜுவை அனுமதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார் நிலா.

மனுவை விசாரித்த நீதிபதி, வருகிற 12ம் தேதி வரை படத்தை வெளியிடஇடைக்காலத் தடை விதித்தார். அன்றைய தேதிக்கே விசாரணையையும்ஒத்திவைத்தார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil