For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கொலை மிரட்டல் விடுத்தார்கள்: நிலா ஜாம்பவான் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட பிரச்சினை காரணமாக குற்றாலத்தை விட்டு வெளியேறிய நடிகை நிலா காணாமல்போய்விட்டதாக படக்குழுவினர் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்.இந் நிலையில் ஹைதராபாத்தில் இருந்தபடி நிருபர்களைத் தொடர்பு கொண்ட நிலா, தன்னை தயாரிப்பாளர் கையை முறுக்கிஅடித்ததாகவும், முகத்தில் பளார் பளார் என அறைந்ததாகவும் கதறி அழுதபடி பேட்டியளித்துள்ளார்.அன்பே ஆருயிரே நாயகி நிலா, அந்தப் படத்திற்குப் பிறகு தமிழில் எந்தப் படத்திலும் புக் ஆகாமல் இருந்தார். தெலுங்கில் தரணிஇயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வந்த நிலா இப்போது பிரஷாந்த்துடன் ஜாம்பவான் என்ற படத்தில் நடிக்கஒப்பந்தமாகியுள்ளார்.ஜாம்பவான் படப்பிடிப்பு குற்றாலத்தில் நடந்து வருகிறது. இதில் பிரஷாந்த், நிலா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன.இதற்காக ரயில் மூலம் நிலா குற்றாலம் அழைத்து வரப்பட்டார். அங்குள்ள ஒரு ஹோட்டலிலும் தங்க வைக்கப்பட்டார்.குற்றாலத்திற்கு வந்தது முதலே புலம்பத் தொடங்கி விட்டாராம் நிலா. இது என்ன ஊர் என்று முனகியபடியே படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார்.ஒரு காட்சியில் தண்ணீர் நிரப்பிய தொட்டியில் நிலா குளிப்பது போல படமாக்கத் திட்டமிட்டிருந்தார்கள். இதற்காக குற்றாலத்தின்மூலிகை நீரை தொட்டியில் நிரப்பி வைத்திருந்தார்கள். படப்பிடிப்புக்கு வந்த நிலா தண்ணீரைப் பார்த்து முகம் சுளித்துள்ளார்.அய்யய்யோ இந்த தண்ணீரில் எல்லாம் என்னால் குளிக்க முடியாது. இதில் புழு, பூச்சி இருக்கும், உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது.உடனே இதை ஊற்றி விட்டு மினரல் வாட்டரை கொண்டு வந்து ஊற்றுங்கள். அப்போதுதான் குளிப்பேன் என்று பிடிவாதமாககுளிக்க மறுத்து விட்டார்.மூலிகைத் தண்ணீர் உடம்புக்கு நல்லதும்மா என்று இயக்குனர் நந்தகுமாரும், தயாரிப்பாளர் சத்யாவும் கூறியுள்ளனர். ஆனால்முடியவே முடியாது என்று மறுத்து விட்டார் நிலா. மினரல் வாட்டரைக் கொண்டு வந்து ஊற்றினால் எவ்வளவு செலவாகும் என்றுதயாரிப்பாளரும், இயக்குனரும் திகைத்து நின்றனர்.இந் நிலையில் தனது கோரிக்கை ஏற்கப்படாததால், கோபமடைந்த நிலா, ஹோட்டலுக்குப் போய் விட்டார். இந்தப் பிரச்சினைகுறித்து படத் தயாரிப்பாளர் சத்யா உடனடியாக சென்னையில் உள்ள தயாரிப்பாளர் சங்கத் தலைவர் டி.ஜி.தியாகராஜன்,செயலாளர் ஏ.எல்.அழகப்பனிடம் புகார் செய்தார்.அவர்கள் இருவரும் நிலாவிடம் தொடர்பு கொண்டு பேசினர். அப்படியும் அவர் மசிந்து வரவில்லை. இந் நிலையில் தான்தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து கார் மூலம் திடீரென கிளம்பிச் சென்று விட்டார் நிலா. அவர் எங்கே போனார் என்பதுதெரியாமல் தவித்தது படக் குழு.கார் மூலம் மதுரை சென்று விமானத்தில் சென்னைக்குப் போயிருக்கலாம் என்ற எண்ணத்தில் மதுரை விமான நிலையத்தில்விசாரித்துப் பார்த்தனர். ஆனால் அவர் விமானத்தில் போகவில்லை என்பது தெரிந்தது. ஒருவேளை காரிலேயே சென்னைக்குப்போய் விட்டாரோ என்று எண்ணியபடி சூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டனர்.நிலா காணாமல் போனது தொடர்பாக குற்றாலம் போலீஸில் படத் தயாரிப்பாளர் சார்பில் புகார் கொடுக்கப்பட்டது.இது தயாரிப்பாளர் தரப்பில் சொல்லப்பட்ட தகவல்..இனி நிலா என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.நிலாவின் கண்ணீர் பேட்டி:நிலா காணாமல் போய்விட்டார். எங்கே போனார் என்று தெரியவில்லை என கோலிவுட்டே கலங்கிப் போன நிலையில் இன்றுஹைதராபாத்தில் இருந்தபடி நிருபரைத் தொடர்பு கொண்ட நிலா கதறி அழுதபடியும், விசும்படியும் அளித்த பேட்டி விவரம்:நான் குடிக்கக் கூட மினரல் வாட்டர் பயன்படுத்துவதில்லை. சாதாரண நீர் தான் குடிப்பேன். குளியல் சீனுக்குப் போய் மினரல்வாட்டர் கேட்பேனா?. என் மீது அபாண்டமான புகார் சொல்கிறார்கள்.குளியல் சீனுக்காக ஒரு தொட்டியில் இறங்கி மணிக்கணக்கில் நனையச் சொன்னார்கள். நானும் சரி என்று எட்டிப் பார்த்தேன்.குளியல் தொட்டியா அது, மண் கலந்த கலங்கிய தண்ணீர் அது. கிட்டத்தட்ட கழுநீர் தொட்டி மாதிரி தான் இருந்தது. அதில் நான்இறங்க மாட்டேன். நல்ல தண்ணீரை ஊற்றுங்கள் என்றேன்.ஆனால், நான் மினரல் வாட்டரில் தான் குளிப்பேன் என்று சொன்னதாக பிளேட்டை மாற்றிவிட்டார்கள்.அந்த நீரில் குளிக்க மறுத்து நான் என் லாட்ஜ் ரூமுக்குத் திரும்பினேன். அப்போது அங்கு தயாரிப்பாளர் சத்யா வந்தார். ஒருபேப்பரைக் காட்டி இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போடு என்றார். நான் என் வீட்டாரிடம் பேசித் தான் எந்த ஒப்பந்ததிலும்கையெழுத்து போடுவேன் என்றேன்.உடனே என் கையை முறுக்கி என்னை கன்னத்தில் பளார், பளார் என்று அறைந்தார். இப்போது கூட கை வலிக்கிறது. கையெழுத்து போடாமல் நீ போயிருவியா, உன்னைக் கடத்திக் கொண்டு போய் விடுவோம், கொலையே கூட செய்துவிடுவோம்என்று மிரட்டிவிட்டு ஹோட்டலின் வாசலிலும், கார் அருகிலும் செக்யூரிட்டியைப் போட்டிவிட்டு போய்விட்டார்.இதையடுத்து ஹோட்டலில் இருந்து டிராவல்சுக்கு போன் செய்து ஒரு கார் வரவழைத்தேன். முன் பக்க வாசலில் செக்யூரிட்டிஇருந்ததால் பின் பக்கமாக வெளியேறி காரில் மதுரை வந்தேன். அங்கிருந்து வேறு பெயரில் பிளைட் டிக்கெட் எடுத்து சன்னைவந்து, அங்கிருந்து ஹைதராபாத்துக்குப் போய்விட்டேன்.என் அப்பா கோடீஸ்வரர். நான் நடித்து சம்பாதிக்க வேண்டிய அவசியமே இல்லை. அவுட்டோர் சூட்டிங் என்ற பெயரில் என்னைஇப்படி கொடுமை செய்வார்கள் என்று கனவில் கூட நினைத்ததில்லை. எனக்கு சினிமாவே வேண்டாம். நான் டெல்லிக்கேபோகிறேன் என்று கூறிவிட்டு கதறி அழுதார் நிலா.

  By Staff
  |

  ஜாம்பவான் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட பிரச்சினை காரணமாக குற்றாலத்தை விட்டு வெளியேறிய நடிகை நிலா காணாமல்போய்விட்டதாக படக்குழுவினர் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்.

  இந் நிலையில் ஹைதராபாத்தில் இருந்தபடி நிருபர்களைத் தொடர்பு கொண்ட நிலா, தன்னை தயாரிப்பாளர் கையை முறுக்கிஅடித்ததாகவும், முகத்தில் பளார் பளார் என அறைந்ததாகவும் கதறி அழுதபடி பேட்டியளித்துள்ளார்.

  அன்பே ஆருயிரே நாயகி நிலா, அந்தப் படத்திற்குப் பிறகு தமிழில் எந்தப் படத்திலும் புக் ஆகாமல் இருந்தார். தெலுங்கில் தரணிஇயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வந்த நிலா இப்போது பிரஷாந்த்துடன் ஜாம்பவான் என்ற படத்தில் நடிக்கஒப்பந்தமாகியுள்ளார்.

  ஜாம்பவான் படப்பிடிப்பு குற்றாலத்தில் நடந்து வருகிறது. இதில் பிரஷாந்த், நிலா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன.இதற்காக ரயில் மூலம் நிலா குற்றாலம் அழைத்து வரப்பட்டார். அங்குள்ள ஒரு ஹோட்டலிலும் தங்க வைக்கப்பட்டார்.

  குற்றாலத்திற்கு வந்தது முதலே புலம்பத் தொடங்கி விட்டாராம் நிலா. இது என்ன ஊர் என்று முனகியபடியே படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார்.


  ஒரு காட்சியில் தண்ணீர் நிரப்பிய தொட்டியில் நிலா குளிப்பது போல படமாக்கத் திட்டமிட்டிருந்தார்கள். இதற்காக குற்றாலத்தின்மூலிகை நீரை தொட்டியில் நிரப்பி வைத்திருந்தார்கள். படப்பிடிப்புக்கு வந்த நிலா தண்ணீரைப் பார்த்து முகம் சுளித்துள்ளார்.

  அய்யய்யோ இந்த தண்ணீரில் எல்லாம் என்னால் குளிக்க முடியாது. இதில் புழு, பூச்சி இருக்கும், உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது.உடனே இதை ஊற்றி விட்டு மினரல் வாட்டரை கொண்டு வந்து ஊற்றுங்கள். அப்போதுதான் குளிப்பேன் என்று பிடிவாதமாககுளிக்க மறுத்து விட்டார்.

  மூலிகைத் தண்ணீர் உடம்புக்கு நல்லதும்மா என்று இயக்குனர் நந்தகுமாரும், தயாரிப்பாளர் சத்யாவும் கூறியுள்ளனர். ஆனால்முடியவே முடியாது என்று மறுத்து விட்டார் நிலா. மினரல் வாட்டரைக் கொண்டு வந்து ஊற்றினால் எவ்வளவு செலவாகும் என்றுதயாரிப்பாளரும், இயக்குனரும் திகைத்து நின்றனர்.

  இந் நிலையில் தனது கோரிக்கை ஏற்கப்படாததால், கோபமடைந்த நிலா, ஹோட்டலுக்குப் போய் விட்டார். இந்தப் பிரச்சினைகுறித்து படத் தயாரிப்பாளர் சத்யா உடனடியாக சென்னையில் உள்ள தயாரிப்பாளர் சங்கத் தலைவர் டி.ஜி.தியாகராஜன்,செயலாளர் ஏ.எல்.அழகப்பனிடம் புகார் செய்தார்.

  அவர்கள் இருவரும் நிலாவிடம் தொடர்பு கொண்டு பேசினர். அப்படியும் அவர் மசிந்து வரவில்லை. இந் நிலையில் தான்தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து கார் மூலம் திடீரென கிளம்பிச் சென்று விட்டார் நிலா. அவர் எங்கே போனார் என்பதுதெரியாமல் தவித்தது படக் குழு.


  கார் மூலம் மதுரை சென்று விமானத்தில் சென்னைக்குப் போயிருக்கலாம் என்ற எண்ணத்தில் மதுரை விமான நிலையத்தில்விசாரித்துப் பார்த்தனர். ஆனால் அவர் விமானத்தில் போகவில்லை என்பது தெரிந்தது. ஒருவேளை காரிலேயே சென்னைக்குப்போய் விட்டாரோ என்று எண்ணியபடி சூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டனர்.

  நிலா காணாமல் போனது தொடர்பாக குற்றாலம் போலீஸில் படத் தயாரிப்பாளர் சார்பில் புகார் கொடுக்கப்பட்டது.

  இது தயாரிப்பாளர் தரப்பில் சொல்லப்பட்ட தகவல்..

  இனி நிலா என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

  நிலாவின் கண்ணீர் பேட்டி:

  நிலா காணாமல் போய்விட்டார். எங்கே போனார் என்று தெரியவில்லை என கோலிவுட்டே கலங்கிப் போன நிலையில் இன்றுஹைதராபாத்தில் இருந்தபடி நிருபரைத் தொடர்பு கொண்ட நிலா கதறி அழுதபடியும், விசும்படியும் அளித்த பேட்டி விவரம்:

  நான் குடிக்கக் கூட மினரல் வாட்டர் பயன்படுத்துவதில்லை. சாதாரண நீர் தான் குடிப்பேன். குளியல் சீனுக்குப் போய் மினரல்வாட்டர் கேட்பேனா?. என் மீது அபாண்டமான புகார் சொல்கிறார்கள்.

  குளியல் சீனுக்காக ஒரு தொட்டியில் இறங்கி மணிக்கணக்கில் நனையச் சொன்னார்கள். நானும் சரி என்று எட்டிப் பார்த்தேன்.குளியல் தொட்டியா அது, மண் கலந்த கலங்கிய தண்ணீர் அது. கிட்டத்தட்ட கழுநீர் தொட்டி மாதிரி தான் இருந்தது. அதில் நான்இறங்க மாட்டேன். நல்ல தண்ணீரை ஊற்றுங்கள் என்றேன்.


  ஆனால், நான் மினரல் வாட்டரில் தான் குளிப்பேன் என்று சொன்னதாக பிளேட்டை மாற்றிவிட்டார்கள்.

  அந்த நீரில் குளிக்க மறுத்து நான் என் லாட்ஜ் ரூமுக்குத் திரும்பினேன். அப்போது அங்கு தயாரிப்பாளர் சத்யா வந்தார். ஒருபேப்பரைக் காட்டி இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போடு என்றார். நான் என் வீட்டாரிடம் பேசித் தான் எந்த ஒப்பந்ததிலும்கையெழுத்து போடுவேன் என்றேன்.

  உடனே என் கையை முறுக்கி என்னை கன்னத்தில் பளார், பளார் என்று அறைந்தார். இப்போது கூட கை வலிக்கிறது.

  கையெழுத்து போடாமல் நீ போயிருவியா, உன்னைக் கடத்திக் கொண்டு போய் விடுவோம், கொலையே கூட செய்துவிடுவோம்என்று மிரட்டிவிட்டு ஹோட்டலின் வாசலிலும், கார் அருகிலும் செக்யூரிட்டியைப் போட்டிவிட்டு போய்விட்டார்.

  இதையடுத்து ஹோட்டலில் இருந்து டிராவல்சுக்கு போன் செய்து ஒரு கார் வரவழைத்தேன். முன் பக்க வாசலில் செக்யூரிட்டிஇருந்ததால் பின் பக்கமாக வெளியேறி காரில் மதுரை வந்தேன். அங்கிருந்து வேறு பெயரில் பிளைட் டிக்கெட் எடுத்து சன்னைவந்து, அங்கிருந்து ஹைதராபாத்துக்குப் போய்விட்டேன்.

  என் அப்பா கோடீஸ்வரர். நான் நடித்து சம்பாதிக்க வேண்டிய அவசியமே இல்லை. அவுட்டோர் சூட்டிங் என்ற பெயரில் என்னைஇப்படி கொடுமை செய்வார்கள் என்று கனவில் கூட நினைத்ததில்லை. எனக்கு சினிமாவே வேண்டாம். நான் டெல்லிக்கேபோகிறேன் என்று கூறிவிட்டு கதறி அழுதார் நிலா.


   உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
   Enable
   x
   Notification Settings X
   Time Settings
   Done
   Clear Notification X
   Do you want to clear all the notifications from your inbox?
   Settings X
   X