நடிகை நிலானி திருமணம் செய்ய மறுத்ததால் தீக்குளித்த உதவி இயக்குனர் மரணம்
சென்னை: நடிகை நிலானி போலீசில் புகார் கொடுத்ததையடுத்து தீக்குளித்த லலித்குமார் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடியவர்களை சுட்டுக் கொன்ற போலீசாரை கண்டித்து வீடியோ வெளியிட்டதால் கைது செய்யப்பட்டவர் நடிகை நிலானி.

டிவி சீரியல்களில் நடித்து வரும் அவர் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் தனது ஆண் நண்பர் லலித் குமார் மீது புகார் அளித்தார். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு லலித் கட்டாயப்படுத்துவதாக அவர் புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து லலித் குமார் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை காப்பாற்றி கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். உதவி இயக்குனரான லலித் குமார் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











