நிலவைத் தேடும் நிழல்.. பக்காவா வெளியான பைலட் படம்.. எப்படி இருக்கு?

இயக்குநர் ஆசிப் எழுதி, அந்தக்குடி இளையராஜா தயாரிப்பில் உருவான 'நிலவை தேடும் நிழல்' (Pilot) திரைப்படம், அவரது யூடியூப் சேனலில் வெளியாகி, பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. நேர்மறை விமர்சனங்கள் குவிகின்றன.

இயக்குநர் ஆசிப், இதற்கு முன் 'ஜெய் ஸ்ரீராம்' (Pilot), 'ஃபலூடா' வெப் சீரிஸ், 'ஆடி மனசுல,' 'ஜோக்கர்,' 'அக்கா மகன்' போன்ற பல படைப்புகளில் பணியாற்றியுள்ளார். குறிப்பாக, 'சண்ட கருப்பன்' ஆல்பம் பாடலும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

'நிலவை தேடும் நிழல்' (Pilot) படத்தில், தயாரிப்பாளர் அந்தக்குடி இளையராஜா மற்றும் அவரது மகன் ஜாய்ஸன் இணைந்து நடித்துள்ளனர். ஜாய்ஸனுக்கு இது முதல் நடிப்பு அனுபவம். மேலும், அவர் ஒரு பாடலையும் பாடியுள்ளார்.

கனவுலகையும் நிஜவுலகையும் ஒன்றிணைக்கும் தனித்துவமான கதைக்களத்துடன் 'நிலவை தேடும் நிழல்' உருவாக்கப்பட்டுள்ளது. உணர்வு, ஃபேன்டஸி, நட்பு, காதல் என பல்வேறு கருப்பொருட்களைக் கொண்டு, இது ஒரு முழுமையான பைலட் படமாக வெளிவந்துள்ளது.

இசை, VFX, DOP, SFX, எடிட்டிங், DI போன்ற தொழில்நுட்பப் பிரிவுகள் படத்தின் தரத்தை வெகுவாக உயர்த்தியுள்ளன. அவற்றின் சிறப்பான பணி பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

நடிகர்கள் நட்டி, களிவெங்கட் உள்ளிட்டோர் தங்கள் எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கங்களில் படத்தைப் பாராட்டி வாழ்த்தியுள்ளனர். இது 'நிலவை தேடும் நிழல்' மீதான கவனத்தை அதிகரித்துள்ளது. இச்சிறு முயற்சி, இயக்குநர் ஆசிப்பின் எதிர்கால பெரிய திரைப்படத் திட்டங்களுக்கான ஒரு முக்கியமான தொடக்கமாக அமைகிறது.

More from Filmibeat

Read more about: india sri lanka
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X