“நிலவை கொண்டு வா..கட்டிலில் கட்டி வை“..பாடலை வெச்சு செய்த நெட்டிசன்ஸ்.. எவன் பார்த்த வேலைடா இது!

சென்னை : "நிலவை கொண்டு வா..கட்டிலில் கட்டி வை" இந்த பாடலை முனுமுனுக்காதே 90ஸ் கிட்ஸ்களே இல்லை என்று சொல்லலாம். வாலி படத்தில் வரும் முதல் இரவு பாடலான இந்த பாடலை உச்ச சாயலில் பாடிவிட்டு அடுத்து வரும் "இன்று முதல் இரவு" வரியை மனசுக்குளே பாடிச்செல்வார்கள்.

எஸ்.ஏ.சூர்யா இயக்கத்தில் 1999ம் ஆண்டு வெளியான திரைப்படம் வாலி இத்திரைப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார்.

அஜித்தின் திரைப்பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படங்களில் ஒன்று வாலி. இத்திரைப்படம் திரையரங்கில் 100நாட்களுக்கு மேல் ஒடி சாதனைப்படைத்தது.

புதுசு புது யோசனை

புதுசு புது யோசனை

இளைஞர்கள் முதல் பெரியவர்கள் மூழ்கி கிடப்பது சமூகவலைத்தள பக்கத்தில், இதனால், மீம்ஸ் கிரியேட்டர்ஸ் முதல் வீடியோ எடிட்டர்கள் வரை எதையாவது புதுசு புதுசா யோசித்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். பொதுவாக ஒரு படத்தில் பாட்டே, வசனமே ஹிட்டானால் அதைவைத்து பல வீடியோவுடன் இணைந்து வேறுவிதமான வீடியோ ஒன்றை உருவாக்கி டிராண்டாக்கி விடுவார்கள்.

ஊ சொல்லியா மாமா

ஊ சொல்லியா மாமா

சமீபத்தில் புஷ்பா படத்தில் வந்த ஊ சொல்லியா மாமா பாடலை, தில்லானா மோகனம்மாள் படத்தில் வரும் நலம் தானே நலம் தானே பாடல் வீடியோவுடன் இணைந்து தெறிக்கவிட்டு இருந்தார். இதில் பத்மினி, சிவாஜியிடம் பாடும் போது ஊ சொல்றியா மாமா ஊ சொல்றியா மாமா என தொடங்க அதற்கு சிவாஜி நாகஸ்வரம் வாசிப்பதை அந்த ஐட்டம் பாடலின் மியூசிக்குடன் இணைத்து பாலையாவின் மேளத்தாளத்துடன் செம காமெடியாக இருக்கிறது. இந்த கலப்படப்பாடல் மிகப்பெரிய அளவில் வைரலானது.

நிலவைக் கொண்டு வா

நிலவைக் கொண்டு வா

தற்போது தேவாவின் இசையில் அனுராதா ஶ்ரீராம் மற்றும் உன்னிகிருஷ்ணன் துள்ளல் குரலில் வாலி படத்தில் வரும் நிலவைக் கொண்டு வா பாடலை விக்கல்ஸ் யூடியூபினர் வெச்சு செய்திருக்கிறார்கள். அனுராதா ஶ்ரீராம் மற்றும் உன்னிகிருஷ்ணன் பாடுவது போல வெறுவிதமாக எடுத்து அனைவரையும் வயிறுகுலுங்க சிரிக்கவைத்துள்ளனர். இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

சந்தோஷமா சிரிங்க

இந்த வீடியோவை வாலி படத்தின் இயக்குநர் எஸ்ஜே சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த உன்னிகிருஷ்ணன், ஒரு ரொமான்ஸ் பாடலை சிரிப்பாக்கி வைரல் ஆக்கியிருக்கிறார்கள், இந்த பாடலை பார்க்கும் போது செம்ம ஜாலியாக மனசே லேசாகிடுது. எல்லோரும் பார்த்துவிட்டு சந்தோஷமா சிரிங்க. இதைவிட, எனக்கு வேற என்ன வேணும். ரொம்ப அழகா பண்ணி இருக்காங்க, இன்றைய இளைஞர்கள் எப்படியெல்லாம் கற்பனைப் பண்றாங்க. என்னென்னல்லாம் ஐடியாக்கள் தோன்றுகிறது என்பதே ஆச்சரியமாக உள்ளது என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X