பிரதீப்பிடம் தோற்றுப்போன தனுஷ்.. மண்ணை கவ்விய NEEK.. டிராகன் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை: ஓ மை கடவுளே படத்தின் மூலம் இயக்குநராக மாறிய அஸ்வத் மாரிமுத்துவின் இயக்கத்தில் கடந்த மாதம் 21ந் தேதி வெளியான படம் டிராகன். இந்த காலத்து இளசுகளுக்கு ஏற்றபடி நகைச்சுவையாக அதே நேரம் படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை இப்படத்தில் இயக்குநர் அழகாக சொல்லி இருந்தார். இந்த படம் வெளியான 10 நாளில் 100 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. அதே நாளில் வெளியான நிலவுக்கு என் மேல் என்னடி கோவம் படம் மண்ணை கவ்வியது.

இயக்குனரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ் டுடே திரைப்படத்தில் ஒரு அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அந்த படத்தை தொடர்ந்து, இரண்டாவதாக டிராகன் படத்தில் ஹீரோவாக நடித்தார். அந்தப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கே.எஸ். ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் மிஷ்கின் ஆகியோர் நடித்திருந்தனர்.லியோன் இசையமைத்துள்ள, இப்படத்தை Ags எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது.

Nilavuku En Mel Ennadi Kobam Dragon collection

டிராகன் படத்தின் கதை: பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்று தங்க மெடல் வாங்கிய பிரதீப் ரங்கநாதன். மெடலை வாங்கிக் கொண்டு தோழியிடம் காதலை சொல்ல செல்ல, அந்த பெண் பிரதீப்பிற்கு நோ சொல்லிவிடுகிறாள். பெண்களுக்கு பிடிக்க வேண்டும் என்றால் கெத்தாக இருக்க வேண்டும் என கல்லூரியில் கெத்தாக சுற்றி 48 அரியர்களை வைத்து, கடைசியில் கல்லூரியை விட்டே அனுப்பப்படுகிறான். அதன்பிறகு பிரதீப் ரங்கநாதனின் வாழ்க்கையில் எப்படி ஜெயித்தார் என்பதுதான் டிராகன் திரைப்படத்தின் கதை. கலகலப்பாக இந்த திரைப்படம் இன்றைய இளசுகளுக்கு மிகவும் பிடித்த படமாக இருக்கிறது. அதற்கு காரணம் பிரதீப்பின் நடிப்பும் கல்லூரியில் நடக்கும் கலாட்டாக்களும் தான். லவ் டுடே படத்தை மாணவர்கள் எப்படி கொண்டாடினார்களோ அதே போல இந்த படத்தையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

நல்ல வசூல்: முதல் நாளில் குறைந்த அளவிலான தியேட்டரில் வெளியான இத்திரைப்படத்திற்கு மக்களிடம் இருந்து நல்ல விமர்சனம் வந்ததால், தியேட்டரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. டிராகன் படம் வெளியான 10 நாட்களில் 100 கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் என இரு மொழிகளிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று திரையரங்குகளில் தற்போதும் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

மண்ணை கவ்விய NEEK: டிராகன் படத்துடன் தனுஷ் இயக்கத்தில் "நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்" படம் வெளியானது. இப்படத்தில், பவிஷ் நாராயணன், மேத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படத்தை தனுஷ் மற்றும் அவரது பெறறோருடன் சேர்ந்து தயாரித்திருந்தார். இப்படத்தில் பிரியங்கா மோகன் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். ஜிவி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தின் பாடல் படம் வெளியாவதற்கு முன்பே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதால், இந்த படம் நிச்சயம் ஒரு சிறப்பான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படம் பெரிதாக பேசப்படவில்லை படம் வெளியாகி பத்து நாளில் வெறும் 8கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. டிராகன் படத்துடன் மோதிய நிலவுக்கு என் மேல் என்னடி கோவம் திரைப்படம் மண்ணை கவ்வி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X