NEEK VS Dragon: எந்த படம் வசூலில் மாஸ்.. முதல் நாள் வசூல் கணிப்பு இதோ!
சென்னை: வெள்ளிக்கிழமை என்றாலே சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டமான நாள் தான். கடந்த வாரம் ஏழு திரைப்படங்கள் தியேட்டரில் வெளியான நிலையில, இந்த வாரம் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படமும், பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் என்ற திரைப்படமும் தியேட்டரில் வெளியாகி உள்ளது. இந்த இரண்டு திரைப்படங்கள் குறித்து நல்ல விமர்சனம் வந்து கொண்டு இருக்கும் நிலையில், இந்த ரெண்டு திரைப்படத்தில் எந்த படம் மாஸான வசூலை பெறும் என்பதை பார்க்கலாம்.
ராயன் திரைப்படத்திற்கு பிறகு தனுஷ் எழுதி இயக்கி இருக்கும் திரைப்படம் தான் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் இந்த திரைப்படத்தில் காதல் என்பது எப்படி பார்க்கப்படுகிறது என்பதை அழகாக ஒரு ஜாலியான திரைப்படம் சொல்லி இருக்கிறார் நம்ம தனுஷ் . இந்த படத்தில் தனுஷின் அக்கா மகனான பவிஷ் கதாநாயகனாக நடிக்க வைத்து அவரை ஹீரோவாக்கி இருக்கிறார். பவிஷூம் தனது மாமா தனுஷ் போல நிறைவான நடிப்பை கொடுத்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக அனிகா சுரேந்தர் மற்றும் பிரியா வாரியர் ஆகியோரின் நடித்திருக்கிறார்கள். இன்று வெளியாகி இருக்கும் இப்படம் குறித்து நல்ல விமர்சனங்கள் வந்துகிட்டு இருக்கும் நிலையில் இத்திரைப்படத்தின் முதல் நாளில் மட்டும் ரூ.5 கோடி முதல் ரூ.7 கோடி வரை வசூலிக்கும் என சொல்லப்படுகிறது. மேலும், அடுத்து வரும் நாட்களில் படத்தின் வசூல் கணிசமாக அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.

பிரதீப் ரங்கநாதனின் டிராகன்: லவ் டுடே திரைப்படத்தின் மகத்தான வெற்றிக்குப் பிறகு பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் டிராகன். இந்த திரைப்படத்தை ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருக்கிறார். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், ஜார்ஜ் மேரியன், இந்துமதி மணிகண்டன், கே.எஸ். ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், வி.ஜே.சித்து, ஹர்ஷத் கான் ஆகியோர் நடித்துள்ளனர்.
NEEK VS Dragon: இந்த படத்தை பார்த்ததை நடிகர் சிம்பு தனது டிவிட்டரில் பிளாக் பஸ்டர் ஹிட் என பகிர்ந்துள்ளார். மேலும் படத்தை பார்த்த ரசிகர்களும் படத்தின் முதல் பாதி நன்றாக இருப்பதாகவும் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பு முந்தைய படத்தை விட மெருகேறி இருக்கிறது. அதே போல, படத்தின் கதை யூகிக்கக்கூடியதாக இருந்தாலும், வி.ஜே.சித்து மற்றும் ஹர்ஷத் கானின் நகைச்சுவை ரசிக்கும் படி இருக்கு, இரண்டாம் பாதிக்கு பிறகு கிளைமாஸ் யூகிக்கவே முடியவில்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்று நிலவுக்கு என் மேல் என்னடி கோவம் திரைப்படமும் வெளியான இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறைவாகத்தான் உள்ளது. ஆனால், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை விட டிராகன் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல விமர்சனம் வந்து கொண்டு இருப்பதாலும், கல்லூரி மாணவர்கள் டிராகன் படத்தை பார்க்க விரும்புவதாலும் அடுத்து வரும் நாட்களில் டிராகன் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











