ஐஸ்வர்யா ராய் விவாகரத்து பேச்சு.. உண்மை இதுதான்.. காரணம்னு கைகாட்டப்பட்ட நடிகை என்ன இப்படி சொல்றாங்க
மும்பை: நடிகை ஐஸ்வர்யா ராய் நேற்று அதாவது நவம்பர் 1ஆம் தேதி தனது 51வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இவருக்கு திரைத்துறையினர் தொடங்கி, அவரது ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் ஐஸ்வர்யா ராயின் கணவர் அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராய்க்கு தனது சமூக வலைதளத்தில் வாழ்த்து சொல்லவில்லை. ஏற்கனவே இவர்கள் இருவருக்கும் விவாகரத்து நடைபெறவுள்ளது என பேசப்பட்டு வந்த நிலையில், அபிஷேக் பச்சன் வாழ்த்து தெரிவிக்காதது, பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில் அபிஷேக் பச்சன் நடிகை நிம்ரத் கவுர் உடன் டேட்டிங்கில் இருக்கின்றார் எனவும் கிசுகிசுக்கள் பாலிவுட்டில் கசிந்தது. இந்நிலையில் நிம்ரத் கவுர் பேசியுள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது கணவரும் நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும் இடையில் விவாகரத்து நடைபெறவுள்ளதாக தகவல்கள் கசிந்து வருகின்றது. ஆனால் இவர்கள் இருவர் தரப்பில் இருந்தும் இதுவரை வாய் திறக்காததால் இந்த செய்திகள் இப்போதுவரை கிசுகிசுக்களாகவே உலா வருகின்றது. இந்த கிசுகிசுக்களை உறுதிப்படுத்தும் விதமாக சில மாதங்களுக்கு முன்னர் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்ட் ஆகியோரது திருமணத்தில் கலந்து கொண்டபோது கூட, இருவரும் தனித்தனியே கலந்து கொண்டனர்.

இருவரும் தனித்தனியே கலந்து கொண்டதும், அந்த நிகழ்ச்சியில் பேசிக்கொள்ளாததும் பெரும் செய்தியாக மாறியது. குறிப்பாக மகள் ஆராத்யா பச்சனுடன் ஐஸ்வர்யா ராய் கலந்து கொள்ள, அபிஷேக் பச்சன் தனியே கலந்து கொண்டார். இது மட்டும் இல்லாமல், ஐஸ்வர்யா ராய் கையில் அவர்களது திருமண மோதிரம் இல்லை என கூறப்பட்டது.

அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய்: நேற்று ஐஸ்வர்யா ராய் தனது 51வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில் அபிஷேக் பச்சன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு வாழ்த்து தெரிவித்து எதுவும் பதிவிடவில்லை. இதனால் இவர்களுக்கு இடையிலான புகைச்சல் மேலும் அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் இருவரும் நேரில் சந்தித்து பிறந்த நாளைக் கொண்டாடி இருக்கலாம் எனவும் அதனால்கூட பிறந்த நாள் வாழ்த்தினை சமூக வலைதளங்களில் பதிவிடமால் இருந்திருக்கலாம் எனவும் பலர் கூறினர்.

நிம்ரத் கவுர்: மேலும் அபிஷேக் பச்சன் நடிகை நிம்ரத் கவுர் உடன் டேட்டிங்கில் உள்ளார். ஐஸ்வர்யா ராயை விவாகரத்து செய்யவுள்ளார் என பேச்சு பாலிவுட் உலகில் அடிபடுகின்றது. இந்நிலையில் இது தொடர்பாக தனியார் ஊடகம் எழுப்பிய கேள்விக்கு, நடிகை நிம்ரத் கவுர் அளித்துள்ள பதில் பலரது கேள்விக்கு பதிலாக அமைந்துள்ளது. அதாவது, அவர் தன்மீதான விமர்சனத்தினை, " நான் என்னதான் சொன்னாலும் இந்த கிசுகிசுக்கள் நிற்கப்போவதில்லை. மேலும் இந்த கிசுகிசுக்களை நிறுத்தும் சக்தி என்னிடத்தில் இல்லை. அதனால் நான் இவற்றிக்கு பதில் அளிப்பதற்கு பதிலாக, என் வேலையைப் பார்ப்பது சரி எனத் தோன்றியதால், என் வேலைகளில் கவனம் செலுத்தி வருகின்றேன்" என பதில் அளித்துள்ளார்.

வீடியோ: இவரது இந்த பதில் பலரது கேள்விகளுக்கு பதிலாக அமைந்துள்ளது. அதேநேரத்தில் தஸ்வி படத்தின் புரோமோஷனின் போது, நடிகை நிம்ரத் கவுருடன் இணைந்து அபிஷேக் பச்சன் பேட்டி அளித்திருந்தார். அப்போது அவரிடம் அவரது 15 ஆண்டு கால திருமண பந்தம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் பதில் அளித்துக் கொண்டு இருந்தபோது, நடிகை நிம்ரத் கவுர், " திருமணங்கள் நீண்ட காலம் நீடிக்காது" எனத் தெரிவிக்கின்றார். உடனே அதைக் கேட்ட அபிஷேக் பச்சன், நன்றி எனக் கூறிய வீடியோவையும் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











