34 ஆண்டுகளுக்கு முன் ரஜினி - கமல் நடித்த நினைத்தாலே இனிக்கும் ட்ரைலர் வெளியீடு!

By Shankar

சென்னை: 34 ஆண்டுகளுக்கு முன் ரஜினியும் கமலும் இணைந்து நடித்து கலக்கிய கே பாலச்சந்தரின் நினைத்தாலே இனிக்கும் படம் இப்போது டிஜிட்டலில் வெளியாகிறது.

புதிய படங்களுக்கு இணையாக இந்தப் படத்துக்கும் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

கமல் - ரஜினியாக இருந்த காலம்...

கமல் - ரஜினியாக இருந்த காலம்...

நினைத்தாலே இனிக்கும் படம் வெளியானபோது ரஜினி நடிக்க வந்து நான்கு ஆண்டுகள்தான் ஆகியிருந்தன. ஆனால் அதற்குள் கிட்டத்தட்ட 50 படங்களை அவர் முடித்துவிட்டிருந்தார். கமல், அடுத்து ரஜினி என இருந்த நாட்கள் அவை. ஆனால் அடுத்த ஒரே ஆண்டில், ப்ரியா - பில்லாவின் மெகா வெற்றி, ரஜினி - கமல் என நிலைமையை மாற்றிப் போட்டது.

34 ஆண்டுகளுக்குப் பிறகு...

34 ஆண்டுகளுக்குப் பிறகு...

நினைத்தாலே இனிக்கும் படம் கடந்த 1979-ல் வெளியானது. கிட்டத்தட்ட 34 நெடிய ஆண்டுகள். இந்தப் படத்துக்குப் பின் வெளியான அலாவுதீனும் அற்புத விளக்கும்தான் இருவரும் சேர்ந்து நடித்த கடைசி படம். அதன் பிறகு சேர்ந்து நடிக்கவில்லை. இந்த காலகட்டத்தில் ரஜினியும் கமலும் நடிப்பு, வசூல், சமூக அந்தஸ்தில் சிகரம் தொட்டு விட்டனர்.

டிஜிட்டலில்..

டிஜிட்டலில்..

இப்போது இந்தப் படத்தை டிஜிட்டலில் நல்ல ஒலித்தரத்துடன் மீண்டும் வெளியிடவிருக்கிறார்கள். கவியரசு கண்ணதாசன் பாடல்களும் எம்எஸ் விஸ்வநாதன் இசையும் இந்தப் படத்தின் இன்னொரு பலம். அவற்றை டிஜிட்டல் தரத்தில் கேட்பதற்காக காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

ட்ரைலர் வெளியீடு

ட்ரைலர் வெளியீடு

புதிய படங்களுக்கு வெளியிடுவதைப் போலவே, இந்தப் படத்துக்கும் ட்ரைலர் வெளியிடவிருக்கிறார்கள். வரும் செப்டம்பர் 13-ம் தேதி சத்யம் திரைரங்கில் இந்த ட்ரைலர் வெளியிடப்படுகிறது. படத்தின் ஹீரோ கமல்ஹாஸன் இதனை வெளியிடுகிறார்.

கே பாலச்சந்தர்

கே பாலச்சந்தர்

படத்தின் இயக்குநர் கே பாலச்சந்தர், இசையமைப்பாளர் எம்எஸ் விஸ்வநாதன், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் மற்றும் நிர்வாகிகள் விழாவில் கலந்து கொள்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X